நவம்பர் 27, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை வானிலை ஆய்வு மையம்: உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் இடியுடன் மழைMay 10, 2017

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் நூறு டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Siragu meteorological

இந்நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழை இடியுடன் பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருச்சி உட்பட பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்ததில், திருச்சி மாவட்டம் புல்லம்பாடியில் 7 செ. மீ மழையும், திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் அடுத்த இரண்டு நாட்களில் தமிழக உள் மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

மேலும் அடுத்த இரண்டு நாட்களில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும். கடலோர பகுதிகளில் 36 முதல் 38 டிகிரியும், உள் மாவட்டங்களில் 40முதல் 42டிகிரி வெப்பநிலையும் பதிவாகும் என்று பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வானிலை ஆய்வு மையம்: உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் இடியுடன் மழை”

அதிகம் படித்தது