ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை வானிலை ஆய்வு மையம்: தற்போது தமிழகத்தில் புயலுக்கு வாய்ப்பு இல்லைDec 20, 2016

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், தமிழக உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் அது புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை மையத்தின் இயக்குனர் ஸ்டெல்லா இன்று தெரிவித்துள்ளார்.

siragu-weather

அடுத்த 24மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக தலைஞாயிறு பகுதியில் 4 செ.மீ மழையும், வேதாரண்யத்தில் 2செ.மீ மழையும், பாபநாசத்தில் 1 செ.மீ மழையும் பெய்துள்ளது என வானிலை மையத்தின் இயக்குனர் ஸ்டெல்லா கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வானிலை ஆய்வு மையம்: தற்போது தமிழகத்தில் புயலுக்கு வாய்ப்பு இல்லை”

அதிகம் படித்தது