மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை வானிலை ஆய்வு மையம்: தென்தமிழகத்தில் மிதமான மழை



Feb 27, 2017

தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், பனி காலம் முடிவடைந்து கோடைகாலம் துவங்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளது.

siragu-rain

தென் கடலோரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தென் கடலோர மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் 3,4 தேதிகளில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வானிலை ஆய்வு மையம்: தென்தமிழகத்தில் மிதமான மழை”

அதிகம் படித்தது