சனவரி 25, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

செம்மொழி இலக்கியங்களில் கடல் சார் உயிரியல்

பேரா. சு. இரவிக்குமார்

Sep 14, 2019

 siragu kadalsar uyirinam3
கிழக்கு மேற்கு கடற்கரை பகுதிகள் மற்றும் அந்தமான், லட்சத்தீவுகள் கடற்கரைகள் உள்ளடங்கிய இந்திய கடற்பகுதி வெப்ப மண்டல பகுதியில் உள்ளடங்கியது. இந்திய கடற்கரையின் நீலம் சுமார் 7916 கி.மீட்டர்கள் ஆகும். இதில்22.6 விழுக்காடு தீவு பகுதிகளைச் சார்ந்தது. இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலம் சுமார் 2மில்லியன் கி.மீட்டர்கள்.

உலகளவில் உள்ள கடல்களில், இந்து மகாசமுத்திரம் சிறியது. அதில் பெரும் பங்கு வகிப்பது இந்திய கடல்தான். அரபிக் கடல், வங்காள விரிகுடா, அந்தமான் கடல் மற்றும் லட்சத்தீவு கடல் ஆகியவை இந்திய கடலில் அடங்கும். கட்ச் வளைகுடா, காம்பட் வளைகுடா மற்றும் மன்னார் வளைகுடா ஆகியவை இந்திய கடல்பகுதியில் உள்ள மூன்று முக்கிய வளைகுடாக்களாகும்.

siragu kadalsar uyirinam4

சுமார் 980 கி.மீட்டர் நீளம் கொண்ட தமிழ்நாட்டின் கடற்கரை, இந்திய கடற்கரையின் மொத்த நீளத்தில் 17விழுக்காடு ஆகும். இதில், வங்காள விரிகுடா 355 கி.மீட்டர் அளவிலும், பாக் சலசந்தி, மன்னார் வளைகுடா மற்றும் அரபிக் கடல் ஆகியவை 625 கி.மீட்டர் அளவிலும் இடம் பெற்றுள்ளன. மணல் பாங்கான கடற்கரை,சதுப்பு நிலங்கள், சதுப்பு நிலக்காடுகள் மற்றும் பவளப்பாறைகள் ஆகியவை தமிழ்நாட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய சூழ்நிலைகளாகும். பவளப்பாறைகள், இராமநாதபுரம் மற்றும் தூத்தூக்குடி மாவட்டங்கள் உள்ளடங்கிய மன்னார் வளைகுடா மற்றும் பாக் சலசந்தி பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இயற்கை மற்றும் இயற்கை வளம் பேணுதலுக்கான சர்வதேச ஐக்கிய கூட்டுறவு அமைப்பின்படி, கடல் ஏற்ற – வற்ற இடைப்பகுதி மற்றும் அது சார்ந்தநீர்ப்பகுதி, தாவர, விலங்கினங்கள், சரித்திர மற்றும் கலாச்சார விசேச அம்சங்கள் ஆகியவை சட்டங்கள் மற்றும் ஏனைய நற்பயனளிக்கும் முறைகள் மூலமாக முழுவதும் அல்லது அதன் ஒரு பகுதி மட்டும் பாதுகாக்கப்பட்டிருந்தால், அது கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதி எனப்படும்.

கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகள், கடல்சார் பல் உயிரினப் பேணுதலுக்கு மிகவும் முக்கியமாகும். கிட்டத்தட்ட,12800-க்கும் அதிகமான உயிரினங்கள் இந்திய கடல்சார் உயிர் பல்வகைமையில் இடம் பெற்றுள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது. இந்தியாவில், சில தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக 1980 மற்றும் 1990க்கு இடைப்பட் பகுதியில் அறிவிக்கப்பட்டன. இயற்கை மற்றும் இயற்கை வளம் பேணுதலுக்கான சர்வதேச ஐக்கிய கூட்டுறவு அமைப்பின்படி, 31 கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஏற்படுத்தப்பட்டன. இது, ஏற்கனவே கடற்கரை சார் மற்றும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதியில் உள்ள 100-க்கும் அதிகமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் சில பகுதிகள் கடல்சார் சூழ்நிலைகள் அல்லது அமைப்புக்களை உள்ளடக்கியோ அல்லது கடலை எல்லைகளாகக் கொண்டோ காணப்படுகின்றன. தமிழ்நாட்டில், மன்னார் வளைகுடா தேசிய பூங்காவைச் சேர்த்து 3 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்களில் கடல் சார் உயிரினங்கள்

நீர்வாழ் உயிரினங்கள் பற்றிய பதிவுகள் ஏறத்தாள முப்பத்தைந்து இடங்களில் காணப்படுகின்றன. அதிலும் மருதம், நெய்தல் திணைப்பாடல்களில் நீர்வாழ் உயிரின குறிப்புகள் அதிகளவிலும், குறிஞ்சி, முல்லை ஆகிய திணைகளில் மிகக் குறைவாகவும் உள்ளது. சங்ககால மக்கள் விலங்குகள், பறவைகள் போன்றவற்றுடன் தொடர்புகொண்டு வாழ்ந்துள்ளனர். அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கி சமூகத்தில் தேவையான இடத்தில் உவமையாகப் பயன்படுத்தியுள்ளனர். என்று குறிப்பிடுகிறார் அன்பு ஓவியா. மீன்கள் பற்றி சங்க இலக்கியங்களில் பல இடங்களில் குறிக்கப்படுகின்றன.

அகலா மீனின் அவிர்வன இமைப்ப – திரு 88
வைகுறு_மீனின் பைபய தோன்றும் – பெரும் 318
வைகுறு_மீனின் நினைய தோன்றி – நற் 48 /4
நிலை கிளர் மீனின் தோன்றும் நாடன் – நற் 393 /7
வான மீனின் வயின்_வயின் இமைக்கும் – குறு 150 /2
வைகுறு_மீனின் தோன்றும் – அகம் 17 /21
வான்_அக மீனின் விளங்கி தோன்றும் – அகம் 114 /11
வான மீனின் வயின்_வயின் இமைப்ப – அகம் 144 /17
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய – அகம் 235 /10
மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம் – அகம் 297 /15
மீனின் செறுக்கும் யாணர் – புறம் 7 /12

சங்க இலக்கியங்களில் நண்டு அலவன் என்ற பெயரில் பயல இடங்களில் சுட்டப்பெற்றுள்ளது. அலவன் (24)

அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன – பொரு 9
கவை தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர் – சிறு 195
கவை தாள் அலவன் அளற்று அளை சிதைய – பெரும் 208
அலவன் ஆட்டியும் உரவு திரை உழக்கியும் – பட் 101
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி – நற் 11 /7
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து – நற் 35 /4
ஆடு வரி அலவன் ஓடு_வயின் ஆற்றாது – நற் 106 /3
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் – நற் 123 /10
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் – நற் 239 /4
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே – நற் 363 /10
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே – குறு 303 /7
ஆய்ந்த அலவன் துன்புறு துணை பரி – குறு 316 /6
அலவன் சிறு_மனை சிதைய புணரி – குறு 328 /2
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த – குறு 351 /2
அலவன் தாக்க துறை இறா பிறழும் – ஐங் 179 /2
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி – ஐங் 197 /1
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய – பதி 51 /7
கையதை அலவன் கண் பெற அடங்க சுற்றிய – கலி 85 /6
ஆனா பரிய அலவன் அளை புகூஉம் – கலி 131 /18
உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி – கலி 136 /2
கரை ஆடு அலவன் அளை_வயின் செறிய – அகம் 260 /5
திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி – அகம் 280 /3
இரும் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப – அகம் 350 /4
அலவன் காட்டி நல் பாற்று இது என – அகம் 380 /7

இவ்வாறு கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய பல செய்திகள் கிடைக்கின்றன. இக்குறிப்புகளை அடிப்படையாக வைத்து கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளலாம்.

இனி தமிழகத்துக் கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் கடல் சார் உயிரின வளம் பற்றிய அடிப்படை செய்திகள் இங்குத் தொகுத்து வழங்கப்பெறுகின்றன. இச்செய்திகளின் புரிதலோடு மாணவர்கள் இப்பயிலரங்கைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.

பவளப் பாறைகள் :

siragu kadalsar uyirinam5

பவளப் பாறைகள் கடலின் மழைக்காடுகள் என்றழைக்கப்படுகின்றன. பவளப் பாறைகள் உயிர்கோளத்திற்க்கும் மனிதர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். இவை மிகவும் அழகாக இருக்கும்.பவளப் பாறைகள் கடற்கரைக்குப் பாதுகாப்பைக் கொடுகின்றன. உணவுக்காகவும் மருந்திற்காகவும் பயன்படும் மீன்கள்,சிப்பிகள் மற்றும் சங்குகள் போன்றவற்றிற்கு இவை புகலிடமாக இருக்கின்றன்.

பவளப்பாறைகளின் வெளிப்புற அமைப்பு மற்றும் உடற்கூறு ஆகியவை சுவாரஸ்யமானதாகும். பவளப்பாறையின் மொத்த அமைப்பு கோரல்லம் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் உயிர்ப்பகுதியான பாலிப்புகள் கோரல்லைட் என்ற கடின பகுதியில் அமைந்துள்ளன. இந்த பாலிப்புகள் ஒருவித கோழையை சுரப்பதன் மூலம் தண்ணீரிலுள்ள நுண்ணுயிரிகளைப் பிடித்து உண்கின்றன. பாலிப்புகளுக்கும் சாந்தெல்லே என்னும் நுண்ணுயிர்ப் பாசிகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு தான் பவளப் பாறைகளின் அதிக உற்பத்தித் திறனுக்குக் காரணமாகும்.

பவளப் பாறைகளின் இனப்பெருக்கம், பாலினப்பெருக்கம் மற்றும் பாலில்லா இனப்பெருக்கம் என்று இருவகைப்படும். பாலினப்பெருக்கத்தில், பாலிப்புகள் முட்டைகளையும் விந்துக்களையும் உருவாக்குகின்றன. இந்த முட்டைகளும் விந்துக்களும் இணைவதால் பிலானுலா என்ற சிறிய பவளப்பாறை உயிரினம் உருவாக்கப்படுகிறது. இந்த பிலானுலா ஏதேனும் ஒரு கடினமான பரப்பில் ஒட்டி வளர ஆரம்பிக்கிறது.பாலில்லா இனப்பெருக்கத்தில் பவளப்பாறைகளின் துண்டுகள் உடைக்கப் பட்டால் அந்தத் துண்டுகள் தனியாக வளரும் திறன் கொண்டவை ஆகும்.

பவளப்பாறைகள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை 1.ஓரத்தில் வளருபவை, 2.மேடை போன்ற அமைப்பில் வளருபவை, 3.பவளத் திட்டுகள் மற்றும் 4.வட்ட வடிவில் வளருபவை.
ஓரத்தில் வளரும் பவளப்பாறைகள் சமீபத்தில் உண்டானவை ஆகும். மிதவெப்ப மண்டல நாடுகளின் கடலோரங்களில் இவை காணப்படுகிறன. இவை கடல் மட்டம் வரையும், கடலை நோக்கியும் வளரக்கூடியவை. இவை பொதுவாகச் சிறிய இடங்களாகவும் மற்றும் கரைக்கு அருகிலேயே இருப்பவையாகும்.

மேடை போன்ற பவளப் பாறைகள் பாமுகாக்கப்பட்ட இடங்களில் வாழ்பவை ஆகும். ஆனால் கரையிலிருந்து சிறிதளவு தூரம் அதிகமாகும். இவை தட்டை போன்ற அமைப்போடு சிறிய ஏரிகளையும் உடையவையாகும்.

பவளத் திட்டு போன்ற பவளப் பாறைகள் கடற்கரைக்கு இணையாக வளருபவை. ஆனால் இவை ஓரு ஏரியின் மூலம் கரையிலிருந்து பிரிக்கப்படுகின்றன. ஓரத்தில் வளரும் வகையான பவளப் பாயைகள் காலப்போக்கில் கரையிலிருந்து ஒரு ஏரியினால் பிரிக்கப்பட்டு திட்டு அமைப்பு போல் மாறக்கூடும். ஆஸ்திரேலியாவில் உள்ள கிரேட் பேரியர் ரீ /ப் சுமார் 2300கி.மீ அளவானதாகும். மேலும் 200000 சதுர கிலோ மீட்டர் இடத்தை இது ஆக்கிரமித்துள்ளது.

வட்ட வடிவில் வளரக்கூடிய பவளப் பாறைகள் பல திட்டுக்களால் சூழப்பட்டவை ஆகும். திட்டுகளின் நடுவில் ஆழமற்ற மணற் பாங்கான மற்றும் பாதுகாக்கப்பட்ட ஒரு ஏரியும் இருக்கும்.திட்டுகளுக்கு இடையில் கடல் நீர் வந்து போவதற்கு ஏதுவாக சிறிய வாய்க்கால்கள் காணப்படும்.

கடல் மெல்லுடலிகள் :

siragu kadalsar uyirinam6

உலகில் ஏறத்தாழ 30 மில்லியன் உயிரினங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. அவற்றுள் கடல் வாழ் உயிரினங்கள் மிக முக்கியமான ஒன்றாகும். சமுத்திரத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடல்வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. அதாவது கரையோரப் பகுதியிலிருந்து ஆழ்கடல் பகுதி வரையிலும் மற்றும் கழிமுகப் பகுதியிலும் காணப்படுகிறது. நுண்ணுயிரிகள் முதல் மிகப் பெரிய திமிங்கலம் வரை கடல் நீரில் வாழ்கின்றன. உலகில் 12 உயிர்வளம் மிகுந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்கிறது. பூமியின் மொத்தப் பரப்பின் 70 சதவீத கணக்கெடுப்பில் 40000 தாவர வகைகளும், 81000 விலங்கினங்களும் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய கடல் என்பது பெரிய கடல்பரப்பும் அத்துடன் தீவுகளையும் உடையது. அதில் சதுப்புநிலக்காடுகள், பவளப்பாறைகள், கழிமுகங்கள், தீவுகள் ஆகிய இடங்களில் கடல் வளங்கள் உள்ளது. கடல் உயிரினங்கள் பலதரப்பட்ட குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அறிவியல் தகவல்படி 23 வகையான உயிரின வகைகள் இந்தியக் கடற்கரையில் உள்ளது.

உலகளவில், கடல் சூழ்நிலையில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கும் உயிரின வகைகளில், ஆர்த்ரோபோடா இன வகைகளுக்கு அடுத்து கிட்டதட்ட 100000 உயிரினங்களுடன் மெல்லுடலிகள் இனம் இரண்டாம் இடம் வகிக்கிறது. இதில் சங்குகள், சிப்பிகள் மற்றும் கணவாய் மீன்கள் ஆகியவை தலா 80,000, 10000 மற்றும் 5000 என்ற எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளது. மெல்லுடலிகள், நன்நீர், கடல் மற்றும் நிலம் என அனைத்துப் பரப்புகளிலும் வியாபித்துப் பரவியுள்ளது. நமது நாட்டிலுள்ள அனைத்து கடற்கரைகளிலும் மெல்லுடலிகள் பயனள்ள மீன்பிடித் தொழிலாக உள்ளது. அத்துடன் உணவாகவும், சுண்ணாம்பு உற்பத்திப் பொருளாகவும், அலங்காரப் பொருட்கள் தயாரிப்பிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் 28 வகையான சிற்பிகளும், 65 வகையான சங்குகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியாவில், 8.5 மில்லியன் ஹெக்டேர் அளவில் வளமான் உட்கடலோரப்பகுதி மற்றும் 1.7 மில்லியன் ஹெக்டேர் அளவில், ஆற்று முகத்துவாரங்கள், கழிமுகப் பகுதி மற்றும் ஏரிகள் இருந்தாலும், மொத்த மீன் உற்பத்தியில், மெல்லுடலிகளின் பங்கு 1 அளவே உள்ளது. கணவாய் மீன்களே இந்த ஒரு சதவிகிதத்தை பெரிதளவில் பிரதிபலிக்கிறது. முக்கியமாக பச்சைச் சிப்பிகளைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். மேற்குக் கடற்கரையில் இதன் ஆண்டு உற்பத்தி 2500 முதல் 4000 டன் வரை வேறுபடுகிறது.

கடல் அட்டைகள் :

siragu kadalsar uyirinam7

கடல் அட்டைகள் சீனர்களுக்கும்,கொரியர்களுக்கும் மற்றும் ஜப்பானியர்களுக்கும் மிகவும் பழக்கமான உணவாகும். அவர்கள் கடல் அட்டைகளை பச்சையாகவோ, பதப்படுத்தியோ அல்லது காய வைத்தோ உண்ணுகிறார்கள்.சீன மற்றும் ஜப்பான் நாட்டின் கிடைக்கக்கூடிய கடல் அட்டையின் ஒரு இனம் மட்டும் 1கிலோவிற்கு அமெரிக்க டாலர் 400க்கு விற்கப்படுகிறது. இரத்தக் கொதிப்பு, தசைக் கோளாறு போன்ற நோய்களுக்கும் மற்றும் வீரியசக்தி விருத்திக்காகவும் கடல் அட்டைகள் மருந்தாக பயன்படுகின்றன. கடல் அட்டையின் உடம்பில் காணப்படும் விஷத்தன்மை கொண்ட பொருள்களிலிருந்து, புற்றுநோய் மற்றும் கட்டிகளைக் குணப்படுத்தும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. கொழுப்பு சத்து குறைந்து காணப்படுவதால் இதய நோயாளிகளின் உணவாக பயன்படுகின்றது. கடல் அட்டையிலிருந்து வெளியாகும் நூல் இழையங்களை உடலின் காயங்களுக்கும் மருந்தாக மீனவர்கள் பூசுவதுண்டு. மற்றும் கருப்புநிற அட்டையின் கத்திரிப்பூ நிறச்சாயத்தை மீன்களை மயக்கிப் பிடிப்பதற்க்கு மீனவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

உலகத்தில் உள்ள கடல்களில் சுமார் 1400 வகையான கடல் அட்டைகள் காணப்படுகின்றன. அவற்றில் 30 இனங்கள் மட்டும் சாப்பிடுவதற்க்கு உகந்தவை. இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள கடல்களின் சுமார் 90 இனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பாதி அளவு ஆழ்கடலில் வசிக்கின்றன. சுமார் 20 இனங்கள் பதப்படுத்தக்கூடய வியாபாரத்திற்க்கு பயன்படுத்தலாம். கடல் அட்டைகளை பதப்படுத்தும் முறை சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சீனர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடல் குதிரை :

கடல் குதிரைகள் 40 மில்லியன் வருடங்களுக்கு முன்பே தோன்றியதாக கருதப்படுகிறது. கேஸ்டீரோஸ்டிபார்ம்ஸ் வரிசையில் சிங்நேத்திடே குடும்பத்தில் கடல்குதிரை, குழாய்மீன்கள் 215 இனங்கள் 52 பேரினங்களின் கீழ் இடம் பெற்றுள்ளன.

குடல் குதிரைகளின் வகைப்பாடு மிகவும் சிக்கலானது மட்டும் இல்லாமல் இன்றளவிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. என்னும், புரத்தோற்றம் மற்றும் மரபு ஆராய்ச்சிகள் உலகளவில் 32கடல் குதிரை இனங்கள் இருப்பதைச்சுட்டிக் காட்டுகின்றன. இதில் கிட்டதட்ட 70 சதவிகிதம், இந்திய பசுபிக் பெருங்கடல் பகுதியில் காணப்படுகின்றன. கடல் குதிரையின் ஆயட்காலம் இன்றளவிலும் கண்டறியப்படவில்லை. ஆனால், நடுத்தர இந்திய பசுபிக் பெருங்கடல் வாழ் கடல் குதிரைகளும் கிட்டதட்ட நான்கு வருடங்கள் இருக்கலாம் என மதிப்பிடபட்டுள்ளது. கடற்புள், பவளப்பாறைகள் மற்றும் சதுப்பு நிலக்காடு பகுதிகள் கடல் குதிரையின் விரும்பத்தகுந்த வாழ்விடங்கள் ஆகும்.

கடல் ஆமைகள் :

siragu kadalsar uyirinam8

ரெப்டைல் எனப்படும் ஊர்ந்து செல்லும் விலங்கின வகையை சார்ந்த கடல் ஆமைகள் பலநூறு வருடங்களாக இவ்வுலகில் வாழ்ந்து வருகின்றன. கடல் ஆமைகள் உணவுக்காகவும், முட்டையிடுதலுக்காகவும் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் இடம் பெயர்ந்து செல்லக்கூடியவை. உலகளவில் 7வகை ஆமைகள் காணப்படுகின்றன.

கடல் ஆமைகள் கடற்கரையில் 50 முதல் 80 செ.மீ வரையிலான குழிதோண்டி அதில் 100 முதல் 150 முட்டைகளையிட்டு பின் அக்குழியை மூடிவிடுகின்றன. முட்டையிட மட்டுமே அவைகள் கடற்கரைக்கு வருகின்றன. முட்டைகள் பொறிப்பதற்க்கு 7 முதல் 10 வாரங்கள் வரை ஆகிறது.ஆண்,பெண் இன உற்பத்தியில் இக்குழிகளின் வெப்பநிலை பெரும்பங்கு வகிக்கிறது.ஆயிரம் ஆமைகளில் ஒன்றுதான் பல்வேறு தடைகளை தாண்டி முதிர்ந்த பருவத்தை அடைவதாக கூறப்படுகின்றது. பேராமை கடல் பாசிகளை உண்ணுகிறது. அழுங்காமை பவளப்பாறை பகுதிகளில் கடல் பஞ்சுகளை உண்ணுகிறது. பெருந்தலை ஆமை, நண்டுகள் மற்றும் மெல்லுடலிகளை உண்கிறது. கடலில் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் வெப்பம் மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பயணம் செய்யும் ஆற்றல் பெற்ற கடல் ஆமைகள், தங்கள் இன வளர்ச்சிக்கு கடற்கரையைச் சார்ந்தே இருக்க வேண்டியதுள்ளது.

கடற்பசு :

டுகாங் என்பதை பொதுவாகக் கடற்பசுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை நீந்துவதற்கேற்ற உடலமைப்பையுடைய பழுப்புநிற பாலூட்டிகள். கடற்பசுக்கள், வாழ்பகுதி மற்றும் ஒரு ஜோடி பக்கத் துடுப்புகளின் உதவியால் மெதுவாக நீந்திச்செல்கின்றன. இவை 3 மீட்டர் நீளம் மற்றும் 500 கிலோ எடை வரையிலும் வளரும். இவற்றின் உடல் ஒழுங்கற்ற அமைப்புடன் சிறுமுடிகளை கொண்டும், கடினமான தோல்களை உடையதாகவும் உள்ளது. இதன் வாய்ப்பகுதி கடற்புற்கள் மேய்வதற்க்கு வசதியாக கீழ்நோக்கிய வடிவில் அமைந்துள்ளது. ஆண் கடல்பசுக்களிடம் தந்தம் காணப்படுகிறது.

சதுப்புநிலக் காடுகள் :

நிலப்பரப்புக்கும் கடலுக்கும் அடையில் அமைந்துள்ள ஒரே வனம் சதுப்பு நிலக்காடுகள் ஆகும். இவை உலகளவில் உள்ள வளம் மிகுந்த இயற்கை நிலைகளில் ஒன்றாகும். இவை கடலோர உயிர பல்வகைமையை அதிகரிக்கச் செய்யதோடு வனப்பெருட்களைக் கொடுப்பதிலும், கடலோரத்தை பாதுகாப்பதிலும், கடலோர மீன்வள ஆதாரத்திற்க்கும் உதவுகிறது. எந்த ஒரு வனப்பபுதிக்கும் இல்லாத சிறப்பம்சமாக கடுமையான சூழ்நிலைகளான உயிரிய உப்புத்தன்மை, வெப்ப நிலை, பலத்த காற்று மற்றும் சகதியான மற்றும் பிரான வாயுவற்ற மணலமைப்பு ஆகியவற்றை சமாலிக்கும் தக அமைப்பை பெற்றுள்ளது. இந்த பகுதியில், இந்தியாவில் சதுப்பு நிலக்காடுகளின் இன்றைய பாதுகாத்தல் நிலை அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் இயற்கையோடு ஒன்றிய வளர்ச்சிக்கு எதிரான சவால்களைச் சந்திக்கும் உத்திகள் ஆகியவற்றை பார்க்கலாம்.

இந்தியாவில் சதுப்புநிலக்காடுகள் 4461 சதுர கி.மீட்டர்கள் வரை பரவியுள்ளன. இவை கிழக்கு கடற்கரை பகுதியில் 59 சதவிகிதமும் மேற்க்கு கடற்கரை பகுதியில் 23 சதவிகிதமும் மற்றும் தீவு பகுதிகளில் 18 சதவிகிதமும் பரவியுள்ளன.

இந்தியாவில் மூன்று வகையான கடலோர அமைப்புகளில் இவை வியப்பித்துள்ளன.அவையாவன:1.ஆற்றுக்கழிமுகப் பகுதி 2.கடல் கழிமுகம் ஆற்று முகத்துவாரம் மற்றும், 3.கடல் சூழ்ந்த தீவுப் பகுதிகள் ஆகியவையாகும்.

கடற்பாசிகள் :

கடல் பாசிகள் கடலில் வளரும் பூக்காத தாவர இனத்தை சேர்ந்தவை இவைகள் இந்திய கடற்கரை பகுதிகளில் பாறைகள், கற்கள் மற்றும் நுறைகற்களின்மீது வளர்கின்றன. கடற்பாசிகள் பாச்சை பாசிகள் பழுப்பு பாசிகள், சிவப்பு பாசிகள் மற்றும் நீள பச்சை பாசிகள் என 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தமிழ்நாடு, குஜராத் கடற்கரை பகுதிகளிலும், மும்பை, இரத்தினகிரி, கோவா, கார்வார், விழிஞ்சம், வார்காலா-நிக்கோபார் தீவுகளிலும் கடற்பாசிகள் பெரும் அளவில் கிடைக்கின்றன.

உலகத்தில் 20000-க்கும் மேற்பட்ட பாசி வகைகள் உள்ளன. பழுப்பு பாசிகள் 1460 மில்லியன் டன்னும், சிவப்பு பாசிகள் 261 மில்லியன் டன்னும் உலகத்தில் உள்ளன. இந்தியாவில் 434 வகை சிவப்பு பாசிகளும், 194வகை பழுப்பு பாசிகளும், 216 பச்சை பாசிகளும் காணப்படுகின்றன. இந்திய கடலில் உள்ள பாசி வளம் 870000 டன் என கணக்கிடப்பட்டுள்ளது. அதில் சுமார் 22000டன் பாசிகள் ஒவ்வொரு ஆண்டும் அருவடை செய்யப்படுகின்றன.

கடற்புற்கள் :

கடற்புற்களானது கடலில் ஆழமற்ற இடங்கள் மற்றும் நதிமுகத்தூவாரங்கள் ஆகியவற்றில் வளரும், பூக்கும் தாவரங்கள் ஆகும். உருவ அமைப்பில் கடற்புற்களானது நிலத்தில் வளரும் தாவரங்களுக்கு ஒத்ததாகும். கடற்புற்களின் வேரானது அவற்றை ஓரிடத்தில் தாங்கி நிறுத்துவது மட்டுமின்றி நிலத்திலுள்ள சத்துக்களை உறுஞ்சவும் பயன்படுகின்றன. கடற்புற்களுக்கு பலமான தண்டுகளும் கிளைகளும் கிடையாது.


பேரா. சு. இரவிக்குமார்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செம்மொழி இலக்கியங்களில் கடல் சார் உயிரியல்”

அதிகம் படித்தது