சனவரி 16, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

செரிமானமின்மையை குணப்படுத்த குறிப்புகள்

சிறகு சிறப்பு நிருபர்

Sep 5, 2015

aseeranam2

1. தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்தால் ‘சீரகக் குடிநீர்’ தயார். இந்த  சீரகக் குடிநீரை தினமும் குடித்து வந்தால் எந்தவித செரிமானக் கோளாறுகளும் வராது.
2. இஞ்சி, கருவேப்பிலை, சீரகம் மூன்றையும் ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க செரிமானமின்மை சரியாகும்.
3. கொத்தமல்லி பூவை தண்ணீரில் காய்ச்சி காலை மற்றும் மாலை  வேளைகளில் குடித்தால் செரிமானமின்மை மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
4. ஒரு தேக்கரண்டி உருளைக் கிழங்கின் சாற்றுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து நிதானமாகக் குடித்தால்  செரிமானக் கோளாறு நீங்கும்.
5. எலுமிச்சையை அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் செரிமானமின்மை குணமாகிறது.
6. பப்பாளி ஒரு நல்ல மலமிளக்கி. செரிமானமின்மையைப் போக்கி நிவாரணம் அளிக்கிறது.
7. சீரகத்தை நன்றாக சிவக்க வறுத்து வைத்துக்கொண்டு, அப்பொடியை மூன்று வேளையும் ஒரு தேக்கரண்டி வெந்நீரில் குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
8. வெதுவெதுப்பான நீரில் சுக்கு பொடியைக் கலந்து குடித்தால் செரிமானமின்மையில் இருந்து விடுபடலாம்.
9. நான்கு பேரிச்சம்பழம் தினமும் சாப்பிடுபவர்களுக்கு செரிமானப்பிரச்சனை வருவதில்லை.
10. உணவு எளிதில் செரிமானமாவதற்கு அகத்திக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
11. கொத்தமல்லி செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு செரிக்கச் செய்கிறது.


சிறகு சிறப்பு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செரிமானமின்மையை குணப்படுத்த குறிப்புகள்”

அதிகம் படித்தது