சனவரி 13 , 2018 இதழ்
தமிழ் வார இதழ்

ஜனவரி 23ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறதுJan 12, 2017

ஜனவரி 23ம் தேதி நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டம் கூட இருப்பதாக சட்டசபை செயலர் ஜமாலுதீன் இன்று(12.01.2016) காலை அறிவித்துள்ளார்.

Siragu tamilnadu government

ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமான பிறகு ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பை ஏற்றார். எனவே ஜெயலலிதா மறைவிற்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் இதுவாகும்.

இக்கூட்டத்தொடர் நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையாற்றுகிறார். அதிமுக அரசின் நலத் திட்டங்கள் ஆளுநர் உரையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி 24ம் தேதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். பின் கவர்னர் உரை மீது விவாதம் நடைபெறும். இறுதியில் முதல்வர் பதிலளிப்பார். இக்கூட்டம் ஐந்து நாட்கள் நடைபெறும்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜனவரி 23ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது”

அதிகம் படித்தது