ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்
Jan 30, 2017
உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததையடுத்து தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாமல் இருந்தது. இதனையடுத்து தமிழகத்தில் மதுரை, சென்னை, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என பலரும் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தைத் தொடர்ந்து தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து, பின் தமிழக சட்டசபையில் நிரந்தர சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தார் தமிழக கவர்னர் வித்தியாசாகர ராவ்.
தமிழக அரசின் சட்டமான மிருகவதை தடுப்பு சட்டம் -217 என்ற சட்டத்திற்கு இன்று ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இந்த ஒப்புதல் மூலம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தடையாக இருந்த அனைத்து தடைகளும் நீங்கியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்”