ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு: பிப்.5ல்- அவனியாபுரம், பிப்.9ல்- பாலமேடு, பிப்.10ல்- அலங்காநல்லூர்
Jan 30, 2017
தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து அதனை தமிழக சட்டசபையில் சட்டமாக்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடை விலகியது.
பிப்ரவரி 1ம் தேதி அலங்காநல்லூரிலும், பிப்ரவரி 2ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடத்த ஜல்லிக்கட்டு விழாக்குழு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் முதல்வரை சந்தித்தபின் ஜல்லிக்கட்டு தேதி அறிவிக்கப்படும் என்று ஜல்லிக்கட்டை ஒத்திவைத்தனர்.
இன்று(30.01.17) ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தபின் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தேதியை அறிவித்தனர்.
அதன்படி ஜல்லிக்கட்டுக்கு பிரசித்தி பெற்ற இடங்களான அலங்காநல்லூரில் பிப்ரவரி 10-லும், பாலமேட்டில் பிப்ரவரி 9-லும், அவனியாபுரத்தில் பிப்ரவரி-5லும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு: பிப்.5ல்- அவனியாபுரம், பிப்.9ல்- பாலமேடு, பிப்.10ல்- அலங்காநல்லூர்”