ஜல்லிக்கட்டை ஆதரித்து புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
Jan 25, 2017
புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு புதியதாக பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று(24.01.17)காலை 11 மணிக்கு துவங்கியது. சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
தொடர்ந்து இன்றும்(25.01.17) சட்டசபை மீண்டும் கூடியது. இதில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும், காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றதை அடுத்து அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து ஜல்லிக்கட்டுக்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டை ஆதரித்து புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது”