சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டாஸ்மாக்! (கவிதை)

குமரகுரு அன்பு

Dec 31, 2022

டாஸ்மாக்!

siragu tasmac1இங்கிருக்கும் 5 டாஸ்மாக்கில்
எதில் இவன் குடித்திருப்பான்?
சாக்கடையில் ஊறி கிடக்கும்
இவனை சேர்ப்பதற்கு
அருகே மருத்துவமனை
எங்கேயிருக்கிறது?
உயிர் பிழைத்த பின்
செய்ய வேண்டிய கடமைகளை
செய்வானா?
இல்லை நாளை வேறொரு
நாற்முனை சந்திப்பில்
இதேநிலையில்  கிடப்பானா?
நமக்கென்ன என்று
செல்லவும் முடியவில்லை…
கருணையை சேமிக்கவா?
தவறான இடத்தில்
முளைக்கும் விதை
பிடுங்கியல்லவா எறியப்படும்?


குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டாஸ்மாக்! (கவிதை)”

அதிகம் படித்தது