சனவரி 22, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

டிசம்பர் 20ந்தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்புDec 17, 2016

சென்னை அறிவாலயத்தில் திமுக பொதுக்குழுக்கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் செயல் தலைவர் பதவியில் ஸ்டாலின் நியமிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாக இருந்தது.

siragu-dmk-meeting

இந்நிலையில் திமுக தலைவர் மு.கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சில நாட்கள் சிகிச்சை பெறவேண்டியுள்ளது எனவும் அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இச்சூழலில் வரும் 20ந்தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழுக் கூட்டம் கருணாநிதி இல்லாமல் கூட்டுவதை அக்கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் விரும்பவில்லை. எனவே இப்பொதுக்குழுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பொதுச்செயலர் அன்பழகன் கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டிசம்பர் 20ந்தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு”

அதிகம் படித்தது