ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

டிசம்பர் 20ம் தேதி தி.மு.க., வின் பொதுக்குழுக் கூட்டம்Dec 10, 2016

திமுக தலைவர் மு.கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்ற 1ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் குணமடைந்து சென்ற 7ம் தேதி வீடு திரும்பினார்.

siragu-karunanidhi

இதைத்தொடர்ந்து வரும் டிசம்பர் 20ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். இக்கூட்டம் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற உள்ளதாகவும், இதில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறினார்.

இந்நிலையில் இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்தார். அவரைத் தொடர்ந்து மு.க. அழகிரியும் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். துறைமுருகன், பொன்முடி, டி.ஆர். பாலு ஆகியோரும் சந்தித்தனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டிசம்பர் 20ம் தேதி தி.மு.க., வின் பொதுக்குழுக் கூட்டம்”

அதிகம் படித்தது