செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை விருப்பத் தேதியில் நடத்த லஞ்சம்May 20, 2017

இரட்டைஇலை சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் வழங்கியாதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டு, பின் டிடிவி தினகரன், இவரின் நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

Siragu dinakaran1

இவர்கள் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா, சுகேஷ் ஆகியோரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து இன்று(20.05.17) சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்விசாரணையில் நீதிபதிகள் தீர்ப்பை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து மறு தேர்தல் தொடர்பாக டிடிவி தினகரனும், சுகேஷ் சந்திரசேகரும் பேசிய ஆடியோ பதிவு தங்களிடம் இருப்பதாக டெல்லி காவல் துறை நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

அதன்படி ஆர்.கே.நகரின் மறு தேர்தல் தேதியினை மாற்றுவதற்கு லஞ்சம் வழங்குவதற்கான பேசப்பட்டது என்று டெல்லி காவல்துறை குற்றச்சாட்டு வைத்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை விருப்பத் தேதியில் நடத்த லஞ்சம்”

அதிகம் படித்தது