ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் டிடிவி தினகரன்May 17, 2017

பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருக்கு இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் டிடிவி தினகரனை கடந்த மாதம் டெல்லி போலீசார் கைது செய்தனர்.

Siragu dinakaran1

இதனையடுத்து டெல்லி நீதிமன்றம், டிடிவி தினகரனை திகார் சிறையிலடைக்க உத்தரவிட்டது. இந்த நீதிமன்ற காவல் முடிந்த பிறகு காணொளி காட்சி மூலம் டிடிவி தினகரனை கடந்த 15ம் தேதி ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து டிடிவி தினகரனை வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடிக்க உத்தரவிட்டது டெல்லி நீதிமன்றம். இந்நிலையில் டிடிவி தினகரன், டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் டிடிவி தினகரன்”

அதிகம் படித்தது