மே 19, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

டெல்லி போலிஸ்: டிடிவி தினகரனுக்கு கால அவகாசம் மறுப்பு



Apr 21, 2017

அதிமுக-வின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருக்கு 1.30 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கடந்த 17ம் தேதி தெரியவந்தது.

Siragu dinakaran1

சுகேஷ் சந்திரசெகரிடமிருந்து லஞ்சப்பனத்தைக் கைப்பற்றியது டெல்லி போலிஸ். மேலும் விசாரனையில் இரட்டை இலை சின்னத்தைப் பெற டிடிவி தினகரன் 60 கோடி ரூபாய்க்கு பேரம் பேசியதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து டெல்லி போலிஸ் நேற்று முன்தினம்(19.04.17)சென்னையில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டுக்குச் சென்று சம்மன் அனுப்பினர். மேலும் நாளை(22.04.17)டெல்லியில் ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளது.

டிடிவி தினகரன் ஆஜர் ஆவதற்கு மூன்று நாட்கள் அவகாசம் கேட்டு மனு அளித்தார். அம்மனுவை ஏற்க மறுத்தது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெல்லி போலிஸ்: டிடிவி தினகரனுக்கு கால அவகாசம் மறுப்பு”

அதிகம் படித்தது