ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

தங்கத் தமிழ் (கவிதை)

வானதி வேதா. இலங்காதிலகம்

Dec 7, 2015

thangaththamil1உயிர் மெய்யான தங்கத் தமிழ்

பயிர் செய்வது உங்கள் கையில்!

உயிர் என்பதாய் யான் மொழிதல்

உயர் காதல் தமிழில் அதனால்.

புதிய சொற்கள் கருத்துகள் தினம்

புதிதாய் பழகிட என்ன கனம்!

குளம் குட்டையாய் தேங்குவதா மனம்!

வளமுடை நதியான பிரவாகம் தனம்!

 

நான்கு வயதுத் தமிழ் வேறு

நாற்பது வயதுத் தமிழொரு கூறு!

வித்தகம் உத்தமம்! தமிழ் சாறு

எத்தகு இனிமை! இல்லையது சேறு!

நல்ல தமிழால் சாதனை உண்டு!

வல்ல தமிழை நெருங்கி அண்டு!

கொல்லாது குடையும் இன்ப வண்டு!

இல்லாத ஆனந்தம் நிச்சயம் உண்டு!

 


வானதி வேதா. இலங்காதிலகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தங்கத் தமிழ் (கவிதை)”

அதிகம் படித்தது