ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தணல் மொழி வேந்தன் வாழ்கவே! (கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jul 11, 2020

siragu oru koppai nanju2

 

அறிவுத் திரட்சியின் கோட்டம்

ஆதிக்க எலும்பொடித்த தீரம்

இனம் காத்திட இடியென

ஈட்டத்திடம் முழங்கிய முரசு

உலகறிவை கொணர்ந்த நாவாய்

ஊன்றிய மூடத்தனம் கிழித்தெறிந்த

எஃகு உள்ளம்,கனல்

ஏற்றிடும் உரை, பறையொலி

ஒல்லார் தலைக்கனம் தகர்த்த

ஓங்கும் மெய் முழவு

கல்வி மறுத்தோரை வீழ்த்திய

காட்டாறு,  கட்டுக்கடங்கா களிறு,

கிடகாய் வாளாய் தமிழர்க்கானவன்

கீழோர் உயர உழைத்தவன்

குருதி கொதிக்கும் எரிமலை,

கூர்மை கொள்கை குன்றவன்

கெட்டழிந்த இனமானம் மீட்டெடுத்த

கேழ் பொருந்திய கதிரோன்

கைம்மாறு வேண்டா தலைவனவன்

கொட்டு அடித்தோர் விரைந்து

கோட்டை கண்டிட உழைத்தவன்

கொண்டி மகளிராய் நினைப்போரும்

கொள்கை மாநாட்டிற்கு வருகவென

காற்றின் ஊடறுத்து விளித்தவன்

தண்டமிழ் கண்ட தமித்த

தலைவனவன்தந்தை பெரியார்,

தமிழர்க்குத் தாயுமானவன்தணல்

மொழி வேந்தன் வாழ்கவே!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தணல் மொழி வேந்தன் வாழ்கவே! (கவிதை)”

அதிகம் படித்தது