மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த பத்து வழிகள்

ஆச்சாரி

Jul 5, 2014

thanneer1

  1. பாத்திரங்கள் கழுவும்பொழுது நீர்க்குழாயைப் பயன்படுத்தாமல் தனி ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி கழுவுதல்.
  2. சமைப்பதற்கு ஏற்ற அளவான பாத்திரங்களை பயன்படுத்தலாம். ஏனெனில் சிறிய அளவு சமைக்க பெரிய பாத்திரத்தை பயன்படுத்தினால் நீர் அதிகம் செலவாகும்.
  3. பழங்களையோ அல்லது காய்கறிகளையோ பயன்படுத்தும்பொழுது ஒரு தனி பாத்திரத்தில் நீர் எடுத்துக்கொண்டு கழுவுவது.
  4. துவைக்கும் பொழுது அதிக அளவு நுரைகள் தரக்கூடியவற்றை தவிர்த்து தரமான சோப்புகளையோ அல்லது பவுடர்களையோ பயன்படுத்தலாம்.
  5. துணி துவைக்கும் இயந்திரம் பயன்படுத்தும்பொழுது இயந்திரம் முழுவதும் துணிகள் நிரம்பிய பிறகு பயன்படுத்துவது.
  6. செயல்திறன் மிக்க சலவை இயந்திரத்தைப் பயன்படுத்துவதால் அதிக நீரை சேமிக்கலாம்.
  7. துணி துவைத்த நீரை கழிப்பறைகளில் ஊற்ற பயன்படுத்தலாம்.
  8. பல் துலக்கும்பொழுதும், சவரம் செய்யும்பொழுதும் நீர் குழாயை அடைத்து விடலாம்.
  9. சோப்பு நுரையுடன் கைகளைக் கழுவும் பொழுது நீர் குழாயிலிருந்து வரும் நீரின் அளவை குறைத்துக் கொள்வது.
  10. நீர் உபயோகம் முடிந்தவுடன் நீர்குழாயை நன்றாக அடைக்க வேண்டும். (ஒரு துளி அளவும் வீணாகாமல்)

In real-life and work-related contexts, people consult a wide range of different information sources every day, https://www.justbuyessay.com without always making conscious judgments about whether the source is reliable and why

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த பத்து வழிகள்”

அதிகம் படித்தது