தமிழகத்தின் ஜல்லிக்கட்டு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியது மத்திய அரசு
Jan 28, 2017
ஜல்லிக்கட்டுக்கு மீதான தடையை நீக்கி நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என பலரும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதையடுத்து தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து, தமிழக சட்ட சபையில் ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர சட்டத்தை இயற்றும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு மசோதா மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட அமைச்சகம், கலாச்சாரத்துறை அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இன்று தமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவிற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்தது. இதையடுத்து மத்திய அரசு இந்த மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தின் ஜல்லிக்கட்டு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியது மத்திய அரசு”