மே 30, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தில் இன்று(12.05.17) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதுMay 12, 2017

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதளம் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலமாகவும் அறிந்து கொண்டனர்.

Siragu-exam-results

இத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் முதல் இடமாக விருதுநகர் மாவட்டமும், கடைசி இடமாக கடலூர் மாவட்டமும் இடம் பெற்றுள்ளது. சென்னை மாவட்டம் 16-வது இடத்தைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 1813 பள்ளிகள் முழுத் தேர்ச்சி அடைந்துள்ளது. அதில் 292 அரசுப்பள்ளிகள் முழுத்தேர்ச்சி அடைந்துள்ளது.

புதுச்சேரி மாவட்டத்தில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் ஒரு சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இங்கும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் இன்று(12.05.17) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது”

அதிகம் படித்தது