மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்புNov 11, 2016

தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமானுக்கு அருகே புதியதாக மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

siragu-vaanilai

இந்த மேலடுக்கு சுழற்சி அந்தமானுக்கு அருகே நிலைகொண்டுள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு படிப்படியாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் அரபிக்கடலில் லட்சத்தீவு அருகே உருவான மேலடுக்கு சுழற்சி மாலத்தீவு வரை பரவியுள்ளதால், தென் மாவட்டங்களில் மழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு”

அதிகம் படித்தது