தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தது மத்திய குழு
Jan 24, 2017
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறக்கப்படாததாலும் பயிர்கள் கருகின. இதன் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் பல விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
இதனையடுத்து தமிழக முதல்வர் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தார். மேலும் மத்திய அரசிடம் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து மத்திய குழு கடந்த 22ம் தேதி தமிழகத்திற்கு வந்தது. இவர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து தமிழகம் முழுவதும் வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து வருகிறது.
இந்த ஆய்வின் முடிவில் மத்திய குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும். இதுவரை நடைபெற்ற ஆய்வில் விவசாயிகள், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்றும் மத்திய குழுவிடம் கோரிக்கை விடுத்தனர். தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்று மத்திய குழு கூறியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தது மத்திய குழு”