மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகம், புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வுகள் இன்று(02.03.17) துவக்கம்



Mar 2, 2017

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வுகள் இன்று துவங்கியுள்ளது. இத்தேர்வுகள் 2427 மையங்களில் நடைபெறுகிறது. இன்று துவங்கிய +2 பொதுத்தேர்வுகள் மார்ச் 31 வரை நடைபெற உள்ளது.

Siragu exam

இத்தேர்வில் 9 லட்சத்து 30 ஆயிரத்து 606 மாணவ, மாணவியர்கள் எழுதுகிறார்கள். இத்தேர்வு காலை 10 மணிக்கு ஆரம்பித்து1 மணி வரை நடைபெறும். காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

நான்காயிரத்தும் மேற்பட்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மொழி பாடங்களுக்கான முதல் தாள் தேர்வு இன்று நடைபெற்றது. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பத்து மொழிகளில் தேர்வு நடைபெற்றது.

தமிழ் முதல் தாள் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகம், புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வுகள் இன்று(02.03.17) துவக்கம்”

அதிகம் படித்தது