தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை
Nov 5, 2016
வங்கக்கடலில் உருவான குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம், ஆந்திரா- விசாகப்பட்டினத்திலிருந்து 280கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. அதனால் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும், காலை அல்லது இரவு வேளையில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருச்சி அருகே உள்ள திருச்சுழியில் 8 செ.மீ மழை பெய்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை”