சனவரி 13 , 2018 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தீவிரம்Jan 11, 2017

பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

siragu-jallikattu

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த வெள்ளலூர் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரையில் மூன்றாவது நாளாக பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இன்று காலை மதுரை தமுக்கம் மைதானத்தில் துவங்கி நீதிமன்றம் வரை நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு கல்லூரி மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

இப்பேரணியில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், இல்லையென்றால் நாங்களே ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்றும் போராட்டத்தில் கோஷமிட்டனர். மதுரை, சென்னை, திருச்சி, திருப்பூர், புதுச்சேரி போன்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தீவிரம்”

அதிகம் படித்தது