ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக அரசு: ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை அளிக்க வேண்டும்Dec 19, 2016

செப்டம்பர் 22ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் டிசம்பர் 5ம் தேதி காலமானார் என்று அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் சிகிச்சையின் பொழுது சசிக்கலா மட்டும் உடனிருந்ததாகவும், வேறு யாரையும் அனுமதிக்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகின.

siragu-jayalalitha

இதனிடையே ஜெயலலிதா சிகிச்சை காலங்களில் படங்கள், ஆடியோ, வீடியோ எதுவும் வெளிவரவில்லை. இது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும் என தமிழக அரசு அப்பல்லோ மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவினால் சசிகலா தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக அரசு: ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை அளிக்க வேண்டும்”

அதிகம் படித்தது