மே 14, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக உணவுத்துறை: குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் இல்லைOct 27, 2016

ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைப்பதற்கு கால அவகாசம் எதுவும் நிர்ணயம் செய்யவில்லை என்று தமிழக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

siragu-ration-shop

குடும்ப அட்டையின் காலக்கெடு டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதால், 2017 ம் ஆண்டு புதிய குடும்ப அட்டையை ஸ்மார்ட் கார்டு வடிவத்தில் அளிக்கப்படவுள்ளது. அதன் காரணமாக தற்போது குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது.

ஆதார் எண்ணை குடும்ப அட்டையில் இணைக்க நவம்பர் 1 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஆதார் எண் பெறாதவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஆனால் தற்போது ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும், இணைக்க காலக்கெடு எதுவும் இல்லை என்றும் தமிழக உணவுத்துறை தெரிவித்துள்ளது. அதனால் வழக்கம்போல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் உணவுப்பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர் உணவுத்துறை அதிகாரிகள்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக உணவுத்துறை: குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் இல்லை”

அதிகம் படித்தது