மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தீவிரம்



Mar 2, 2017

தமிழகத்தில் 1,31,794 உள்ளாட்சி பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த வருடம் அக்டோபர் 17,19-ம் தேதிகளில் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் இத்தேர்தலில் முறையாக இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.

Siragu election

இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி இவ்வழக்கை ரத்து செய்தது மட்டுமல்லாது, பஞ்சாயத்து சட்ட விதிகளை பின்பற்றி புதியதாக தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்றும், உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் 31க்குள் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மாநிலதேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைவிதித்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது, இதற்கு உள்ளாட்சித் தேர்தலுக்கு ரத்து செய்து உத்தரவிட்டதற்கு தடைவிதிக்க மறுத்து விட்டது உயர்நீதிமன்றம்.

மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மே 15ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து வாக்காளர் இறுதிப் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஓட்டுச்சாவடிகள் அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இவ்வழக்கின் விசாரணை வரும் திங்கட்கிழமை வருவதையொட்டி தேர்தல் தேதி மற்றும் தேர்தல் குறித்த புதிய அறிவிப்புகள் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தீவிரம்”

அதிகம் படித்தது