மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள்Oct 24, 2016

siragu-tamilnadu-government

2011ம் ஆண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு பதவி ஏற்றுக்கொண்ட பின் இன்று (அக்டோபர் 242016) இப்பதவிகாலம் முடிவடைகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி 1,18,974 பதவியும், நகர்புற உள்ளாட்சி 12,820 பதவிகள் என மொத்தம் 1,31,794 பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இத்தேர்தலை சென்னை ஐகோர்ட் ரத்து செய்ததுடன், டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இத்தேர்தலுக்கான தடை உத்தரவை நான்கு வாரங்களுக்கு நீடித்தும் உத்தரவிட்டிருந்தது.

அதனால் அரசாணை உள்ளாட்சி அமைப்புகளை கவனிக்க தனி அதிகாரிகளை இன்று மாலை நியமிக்கும் என்று தெரிய வருகிறது. இந்த அதிகாரிகள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள்”

அதிகம் படித்தது