ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரி சோதனைDec 21, 2016

போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் ரூ.171 கோடி ரொக்கமும், 138 கிலோ தங்கமும் சிக்கியது. மேலும் சேகர் ரெட்டி மேல் சி.பி.ஐ அமலாக்கப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.

siragu-rama-mohana-rao

இந்நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராம மோகன் ராவின் மகனின் வீடு உட்பட 13இடங்களிலும் வருமான வரி சோதனை நடத்தி வருகிறது.

இச்சோதனையில் கைப்பற்றப்படும் ஆவணங்கள் அடிப்படையில் ராம மோகன் ராவின் மீது வழக்கு பதிவு செய்யப்படும் பொழுது, அவர் இடைநீக்கம் செய்யப்படுவார். இதனால் அவரது வீட்டின் முன்பு துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்படுவது தமிழகத்திலேயே முதன்முறையாகும்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரி சோதனை”

அதிகம் படித்தது