மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக முதல்வர்: ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் ஓரிரு நாட்களில் கொண்டுவரப்படும்



Jan 20, 2017

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார்.

siragu-panneerselvam2

உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கு இருப்பதால் தற்போது தம்மால் இயலாது என்று பிரதமர் கூறியுள்ளார். எனினும் மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று கூறியுள்ளார். இதையடுத்து முதல்வர் நேற்று(19.01.17) டெல்லியில் தங்கி சட்ட வல்லுனர்களுடன் தமிழக அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

மிருகவதை சட்டத்தின் கீழ் திருத்தம் கொண்டு வந்து தமிழக அரசே அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அவசர சட்டவரைவு கொண்டு வந்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படும், பின் கவர்னரின் ஒப்புதலுடன் அவசர சட்டம் இயற்றப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். அதனால் ஓரிரு நாட்களில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக முதல்வர்: ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் ஓரிரு நாட்களில் கொண்டுவரப்படும்”

அதிகம் படித்தது