ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழத்தில் வறட்சி காரணமாக விவசாயிகளின் மரணம் 100- ஐ தாண்டியதுJan 5, 2017

தமிழத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் வறட்சி ஏற்பட்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சியால் பயிர்கள் கருகுவது காரணமாக தற்கொலை மற்றும் மாரடைப்பினாலும் விவசாயிகள் பலர் மரணமடைந்து வருகிறார்கள்.

siragu-farmer-suicide

இந்நிலையில் இன்று(05.01.2017) மட்டும் ஆறு விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். இதனால் விவசாயிகளின் மரணம் 100- ஐ தாண்டியது.

அரியலூர் மாவட்டம் ஒட்டக்கோயிலைச் சேர்ந்த கலியபெருமாள், நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த சிவானந்தம், இரும்பலக்குறிச்சியை சேர்ந்த தர்மன், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியைச் சேர்ந்த நவசீலன், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தைத் சேர்ந்த சக்கரவர்த்தி, ராமநாதபுரம் கமுதியைச் சேர்ந்த சித்தய்யா போன்ற ஆறு விவசாயிகள் இன்று ஒரு நாளில் பயிர்கள் வாடியதால் உயிரிழந்துள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழத்தில் வறட்சி காரணமாக விவசாயிகளின் மரணம் 100- ஐ தாண்டியது”

அதிகம் படித்தது