நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழிசை அரங்குகள் வேண்டும்! (கவிதை)

இல. பிரகாசம்

Nov 18, 2017

tamil-mozhi-fi
தேனமிர்த மாம்தமி ழிசையை –நாம்
தீந்தமிழ் சொல்லா லன்றோ கேட்கிறோம்?
மேனாட்டு இசையால் தாய்மொழிச் சொற்கள்
மேன்புகழ் நலிந்து வாடக் காணவோ?

தமிழராம் நம்வீட்டில் நிகழும் -நல்ல
தமிழ்ப்பண் பாட்டை வளர்த்தெடுக்க நாளும்
தேனிசை சுரக்கும் பண்பாட்டு முறைபேணி
இசைத்தமிழ் காப்பதைக் கடமையாய்க் கொள்வோம்.

நாளும் வளர்தமிழ் முறைக்கு -நாம்
நல்ல தமிழ்த்தொண் டாகத் தமிழர்
அரங்குகள் எல்லாம் தமிழ்இசை முழக்கி
ஆனந்தம் கொள்வதி லன்றோ இசைபேறு!

தமிழ்மொழி வளர்வதற்கு நாம்செய்யும் -முதல்
தொண்டாக வளம்பெற்ற தமிழிசை அரங்கு
கூட்டிக் கேளாத் தன்மை செவிநீக்கி
கரும்புச் சாறொத்த தமிழமுதம் உண்போம்!

எம்மொழியும் வாழ இசையேயாம் -நாம்
உணர்ந்து வாழ வேண்டுமெனில் எல்லோரும்
தண்டமிழ்ச் சொல்லிசைத்தும் மொழிவளரத் தமிழிசை
அரங்குகள் அமைத்து தமிழ்த்தொண் டாற்றுவோம்.


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழிசை அரங்குகள் வேண்டும்! (கவிதை)”

அதிகம் படித்தது