மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் உறுப்பினர்களின் நேர்காணல்

சித்திர சேனன்

Sep 12, 2015

tamil menporul2கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?

பதில்: வணக்கம், என் பெயர் சிபி, சொந்த ஊர் இராமநாதபுரம் அருகில் இருக்கிற R.S மங்கலம் வரவனு என்கிற கிராமம். நான் படித்தது என்று பார்த்தால் நான்கைந்து ஊர்களில் படித்திருக்கிறேன். முதலில் சென்னையில் ஆல்ஃபா மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்திருக்கிறேன், அடுத்து தூத்துக்குடியில் ஸ்பிக் நகர் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் படித்தேன். ஆர்மி பள்ளி என்று சைனிக் பள்ளி அமராவதி நகரில் 3 வருடங்கள் படித்தேன். அதற்கடுத்து 11வது மற்றும் 12வது சென் சேவியர்ஸில் படித்தேன். எங்களது குடும்ப சூழ்நிலையினால் பல ஊர்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். எனவே நான் நிறைய பள்ளியில் படிக்கவேண்டியிருந்தது. கல்லூரி வந்து B.E. Computer Science சென்னை கேளம்பாக்கத்தில் இருக்கிற ஹிந்துஸ்தான் கல்லூரியில் படித்தேன். அதை முடித்துவிட்டு இரண்டு வருடங்கள் வேலை பார்த்தேன். அந்த வேலை பார்த்த பிறகு UPSC (Union Public Service Commission) என்ற தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தேன். அதற்கு நடுவில் M.E. Computer Science படித்து முடித்தேன். அதன்பிறகு ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என்று சொல்லலாம். அதே மாதிரி தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையுடன் என் வாழ்க்கை என்று பார்த்தால் B.E யை 2008 ல் முடிக்கும் பொழுது, ஒரு சில நண்பர்கள் இணைந்து தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை என்று ஆரம்பிக்கலாமா என்று யோசித்தோம். அதன் பிறகு 2015 வரையிலும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கேள்வி: தமிழில் மென்பொருள் உருவாக்கவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?

tamil menporul1பதில்: முதலில் தமிழ் மென்பொருள் உருவாக்கவேண்டும் என்ற நோக்கோடு இதை ஆரம்பிக்க வில்லை. நாங்கள் ஆரம்பித்தது அறிவு தனிவுடைமையாக இருக்கக்கூடாது, அறிவு பொதுவுடைமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் 2008-ல் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையை ஆரம்பிக்கலாம் என்று யோசித்தோம். அப்படி நாங்கள் செய்துகொண்டிருக்கும் பொழுது எங்களுக்கு என்ன புரிய ஆரம்பித்தது என்றால், கணினி அறிவியல் மட்டுமே ஒரு பெரிய தடை கிடையாது, ஆனால் தமிழில் கணினி அறிவியல் இல்லாததுதான் கணினியோ, அது சார்ந்த தொழில் நுட்பங்களோ மேலே போவதற்கு ஒரு பெரிய தடையாக இருக்கிறது என்பது மாதிரி பார்த்தோம். மிகவும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், ATM Machine ல் ஆங்கிலம் இருக்கிற வரைக்கும் அது பெரிய அளவில் போகவில்லை. அதன் பிறகு எப்பொழுது தமிழில் வந்ததோ அதன் பிறகுதான், ATM பயன்பாடு என்பது பெரிய அளவில் உருவாகியது. இதை புரிந்துகொண்டதற்குப் பிறகுதான் நாங்கள் அனைவரும் சேர்ந்து தமிழில் மிக முக்கியமான சில மென்பொருட்கள் உருவாக்கவேண்டும் என்பது. இந்த விடயத்தை நாங்கள் ஆரம்பித்தது அல்ல, இதற்கு முன்பு பலபேர் செய்திருக்கிறார்கள்.

தமிழை localization என்று சொல்வார்கள், தன்மொழியாக்கம் என்று சொல்வார்கள். அதை நிறையபேர் செய்திருக்கிறார்கள். தமிழில் முக்கியமான ஆவணங்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அதேமாதிரி Unicode-க்காக நிறையபேர் சண்டை போட்டிருக்கிறார்கள். இதில் நிறையபேர் போராட்டம் செய்திருக்கிறார்கள், இது நீண்ட நெடிய போராட்டம், இதில் எங்களுடைய பங்கும் இருந்திருக்கிறது. அதனால் தமிழில் குறிப்பாக இலவசமாக மென்பொருட்கள் வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய குறிக்கோளாக இருந்திருக்கிறது.

கேள்வி: தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன?

tamil menporul7பதில்: கட்டற்ற என்றால் என்ன என்ற கேள்வி, பலபேருக்கு விசித்திரமானதாக இருக்கலாம், இதை ஆங்கிலத்தில் எப்படி வைத்திருந்தார்கள் என்றால் Free Software என்று வைத்திருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் Free Software என்றால் Freedom Software என்று நிறையபேர் புரிந்துகொண்டார்கள். ஆனால் தமிழில் அதை மொழிபெயர்த்தீர்கள் என்றால் இலவச மென்பொருள் என்று வந்துவிடும். ஆனால் நாம் எதிர்பார்ப்பது இலவச மென்பொருள் இல்லை, கட்டற்ற மென்பொருள். கட்டற்ற என்றால் கட்டுப்பாடுகள் அற்ற அதாவது ஒருவர் ஒரு மென்பொருளை வைத்து என்ன செய்யவேண்டும் என்று நினைத்தாலும் அதாவது படிக்கவேண்டும் என்று நினைத்தால் படிக்கலாம், அதை இன்னொருவருக்குக் கொடுக்கவேண்டும் என்று நினைத்தால் கொடுக்கலாம், அதை மேம்படுத்தவேண்டும் என்று நினைத்தால் மேம்படுத்தலாம், இப்படி அவர் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று நினைக்கிறாரோ அந்த விசயங்கள் எல்லாவற்றையும் செய்யமுடிவதுதான் கட்டற்ற மென்பொருள். இந்த கட்டற்ற மென்பொருள் சம்பந்தமாக உலக அளவில் விவாதமே நடந்துகொண்டிருக்கிறது.

கேள்வி: கட்டற்ற அறிவு என்றால் என்ன?

பதில்: கட்டற்ற அறிவு என்று பார்த்தீர்கள் என்றால் கட்டற்ற மென்பொருள் என்பது மென்பொருள் சம்பந்தமான விடயங்கள் கட்டற்றதாக இருக்கிறது. திடீரென்று ஒரு ஊரில் பாம்பு கடித்தால் இறந்துவிடுகிறார்கள், ஆடு கடித்தால் இறக்கவில்லை என்பது எப்படி தெரிகிறது, ஏனென்றால் பாம்பு கடித்து நிறையபேர் இறந்திருப்பார்கள், அதை இன்னொருவர் பார்த்திருப்பார். எனவே அறிவு என்பது பொதுப்படையான ஒரு விசயம். பழநெடுங்காலமாக மனிதன் வழிவழியாக அவனுக்கென்று ஒரு அறிவு வந்திருக்கும், ஆக அறிவு என்பது தனிவுடைமை கிடையாது, அது பொதுவுடைமை.

பத்து வருடங்களுக்கு முன்னால் Encyclopedia அல்லது கலைச்சொல் அகராதி அந்த மாதிரி விசயங்களை யோசித்தீர்கள் என்றால் ஆங்கிலத்தில் Encyclopedia Britannicaஎன்று இருந்தது. அதைத் தவிர்த்து வேறு எதுவும் கிடையாது. அவர்களிடம் தான் நீங்கள் சென்று வாங்கவேண்டும், அது மிகவும் விலை அதிகம். விலை அதிகம் என்பது மட்டுமல்ல, எல்லாராலும் மாற்றமுடியாது அந்த மாதிரியான விசயங்கள். விக்கிபீடியாவைப் பார்த்தீர்கள் என்றால் அதில் ஒரு மிகப்பெரிய விசயம் என்றால் எல்லோரும் அதில் பங்களிக்க முடியும், அப்படி ஒரு சூழல். விக்கிபீடியாவில் ரவி என்று ஒருவர் இருக்கிறார், அவர் என்ன சொல்வார் என்றால் புலி ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அதை மிருகக்காட்சி சாலையில் வைத்து வளர்த்தால் வளராது. புலியும் வளரவேண்டும், அதை சுற்றியிருக்கிற காடும் வளரவேண்டும், மான் நன்றாக வளரவேண்டும், அது ஒரு சுற்றுச்சூழல். கட்டற்ற மென்பொருள், கட்டற்ற அறிவு என்பது தனியாக இருப்பது கிடையாது, அதை சுற்றி எல்லாமே இருக்கவேண்டும். அதில் அது வளரவேண்டும் என்பதுதான் கட்டற்ற அறிவு என்பது.

கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?

பதில்: என்னுடைய பெயர் சுதிர், எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு கிராமம், நான் படித்தது எல்லாமே கிராமத்தில் இருக்கிற அரசு பள்ளியில்தான். அதன்பிறகு மதுரையில் ஒரு பள்ளியில் எனது படிப்பைத் தொடர்ந்தேன். அதன் பிறகு BSc இளங்கலை படித்தேன். அதன் பிறகு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் MSc IT படித்தேன். இந்த கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையுடன் என்னுடைய தொடர்பு என்று பார்த்தீர்கள் என்றால் 2012க்குப் பிறகு என்னுடைய பங்களிப்பு இந்த அறக்கட்டளையில் இருக்கிறது.

கேள்வி: ஆங்கில மோகம் அதிகரித்துவிட்ட இக்கால சூழலில் தமிழ் மென்பொருளை தற்காலத் தமிழ் மக்கள் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

tamil menporul5பதில்: இந்தக் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. நான் பேசும் பொழுது எனது அறிமுகத்திலேயே சொன்னேன். நான் கிராமத்திலிருந்து வந்த படித்திருக்கக்கூடிய ஒரு இளைஞன். மென்பொருளை பயன்படுத்துவதற்கு ஆங்கிலம் கண்டிப்பாக தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் எல்லோருக்கும் இருக்கவேண்டியதில்லை. ஆங்கிலம் எல்லோரும் தெரிந்திருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எப்படிப் பார்த்தாலும் கிராமத்திலிருந்து வரக்கூடிய, தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான இளைஞர்கள் அரசுப் பள்ளியிலும், தமிழில் படித்துவரக் கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். குறிப்பாக இதுவரையிலும் கணினி அறிவியலில் ஆங்கிலம் படித்தவர்களால்தான் நிறைய வேலைகள் செய்ய முடியும். எங்களை மாதிரி ஆட்கள் உள்ளே வரும்பொழுது தேவை அதிகரித்துள்ளது. தமிழில் மென்பொருள் இருந்தால் மட்டும்தான் எங்களால் பயன்படுத்த முடியும் என்ற கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எங்களை மாதிரியான ஆட்கள் இன்னும் கூடுதலாக இதில் பங்களிப்பு செய்யும் பொழுது, இதை பயன்படுத்துபவர்களுடைய எண்ணிக்கையும் அதிகரிக்கும், அது கண்டிப்பாக நடக்கும் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய சொந்த அனுபவம், என்னைப் போன்ற நிறைய இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஏனென்றால் எல்லோரும் கிராமத்திலிருந்து வந்து படித்துவிட்டு புதுமையான விசயங்களை எப்படி கற்றுக்கொள்வது, தான் கற்றுக்கொண்ட மொழிகளில் எந்த மென் பொருளும் இல்லையென்றால் அவர்களால் கற்றுக்கொள்வது கடினம். இது கண்டிப்பாக வளரும்.

கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?

பதில்: என் பெயர் அருண் பிரகாஷ், எனது சொந்த ஊர் இராமநாதபுரம், FSFTN Free Software Foundation Tamil Nadu-ல் 8 வருடங்களாக இருக்கிறேன். MTechபடித்திருக்கிறேன். ஆரம்பத்தில் இந்த அமைப்பு வளர் நிலையில் இருந்தது. போதுமான மக்கள் இருக்க மாட்டார்கள். அப்பொழுதுதான் IIT-யிலிருந்து ஒருகுழு வந்து வந்தார்கள். FSFTN-ன் கூட்டம் பார்த்தீர்கள் என்றால் ஆங்கிலத்தில்தான் எல்லாமே இருக்கும். மின்னஞ்சல் கூட தமிழில் தட்டச்சு செய்ய முடியாது. அந்த மாதிரியான நிலைகள்தான் இருந்தது. ஒரு அமைப்பு தமிழ்நாட்டில் இயங்குகிறது, தமிழ் பேசாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று இருந்தது. ஆனால் இப்பொழுது அதிகபட்சம் தமிழில்தான் இயங்குகிறது.

கேள்வி: இதுவரை என்னென்ன தமிழ் மென்பொருட்களை உருவாக்கியுள்ளீர்கள்?, தமிழ் மென் பொருள் உருவாக்கத்தில் தங்களின் எதிர்காலத் திட்டம் என்ன?

பதில்: ஒரு மென்பொருள் தமிழில் வருவதை தமிழ் மென்பொருள் என்று நான் எடுத்துக்கொள்கிறேன். நான் ஒரு மென்பொருள் உருவாக்குகிறேன் என்பதுதான் இன்று எல்லோருமே சொல்லிக்கொண்டிருப்பது. போதுமான ஆய்வு இல்லை, எனக்கு அங்கீகாரம் இல்லை எல்லாமே தான் ஒரு தனி நபராக முன்னேற்றப்படவேண்டும், தான் வந்து தனியான தீர்வு தரவேண்டும் என்றுதான் எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த கட்டற்ற மென்பொருளைப் பார்த்தீர்கள் என்றால் ஒரு குழுவாக செயல்படுகிற ஒரு விசயம். எனக்கு ஒரு விசயம் பிடித்திருக்கிறது, எனவே அந்த விசயத்தை செய்யவேண்டும் என்றால் தனியாக செய்யமுடியாது, எந்த ஒரு விசயமாக இருந்தாலும் தனியாக செய்ய முடியாது. நானே தனியாக செய்யவேண்டும் என்றாலும்கூட கணினி என்ற ஒன்றை இன்னொருவர் செய்துதான் கொடுக்க வேண்டும், அதில்தான் நான் வேலைசெய்ய ஆரம்பிக்க வேண்டும். கட்டற்ற மென்பொருளைப் பார்த்தீர்கள் என்றால் குழுவாக செயல்படுவதுதான் நோக்கம். அது இல்லாமல் கட்டற்ற மென்பொருள் கிடையாது.

tamil menporul6நாங்கள் இந்த கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையில் என்ன செய்கிறோம் என்றால் ஏற்கனவே இருக்கிற மென்பொருள்களை தமிழ்படுத்தி தமிழ் மக்களுக்குக் கொடுக்கிறோம். அதுதான் எங்களுடைய பிரதான கொள்கை. அதுபோக சில ஏற்கனவே தமிழ் சார்ந்த மென்பொருட்களை ஆதரிக்கிறோம். FSFTN-ன் பெரிய சாதனை என்று பார்த்தீர்கள் என்றால் mozila firefox ல் இருப்பதை முழுமையாக மொழிபெயர்ப்பது. அதில் ஏற்கனவே பலதரப்பட்டவர்கள் மொழி பெயர்த்திருக்கிறார்கள், ஆனால் அதில் 30 சதவிகிதம், 20 சதவிதம் என்று மாறி மாறி வந்துகொண்டிருக்கிறது. எனவே FSFTN-ன் முதல் தமிழ் பணி என்று பார்த்தீர்கள் என்றால் mozila firefox ல் இருப்பதை முழுமையாக மொழிபெயர்ப்பது. அதன் பிறகு பார்த்தீர்கள் என்றால் இன்னும் சில PROJECT ல் மொழிபெயர்ப்புப் பணிகளை செய்துகொண்டிருக்கிறோம். FSFTN-ன் பிரதானம் என்ன என்று பார்த்தீர்கள் என்றால் மொழிபெயர்ப்பு. தமிழ் மென்பொருட்களை தமிழ் மக்களுக்குக் கொடுப்பதுதான் எங்கள் நோக்கம்.

எதிர்காலத் திட்டம் என்று மிகப் பெரிய அளவில் யோசிக்கத் தேவையே இல்லை. அதாவது தமிழ் தெரிந்த ஒருவரால் கணினியை பயன்படுத்தமுடிய வேண்டும் அவ்வளவுதான். ABCD தெரியாத ஒரு ஆள் அ, ஆ –வை வைத்து கணினியை பயன்படுத்தவேண்டும். அதுதான் எதிர்கால நோக்கம்.

கேள்வி: எத்துறை அல்லது எப்பணி செய்பவர்களுக்கு உங்களின் தமிழ் மென்பொருள் அதிகம் பயன்படும்?

பதில்: தமிழ் தெரிந்தவர்களுக்கு அதிகம் பயன்படும். பொதுவாகப் பார்த்தீர்கள் என்றால் domainபடி பிரித்துக்கொள்வதில்லை. உதாரணமாக எங்களுக்கு சில வேலை கள் இருக்கும். நாங்கள் FSFTN- என்றால் தனியான ஒரு நபர் அமைப்பில் சேருகிறீர்கள், நீங்கள் மட்டுமே இதை செய்கிறீர்கள் என்று இருக்கக்கூடாது. இப்பொழுது Mozilla localization வேலை என்று பார்த்தீர்கள் என்றால்,ஆரம்பகட்டத்தில் FSFTN-ன் மக்கள் வந்தோம், பிறகு 100 சதவிகிதம் முழுமையானோம். பின் மலேசியாவிலிருந்து மக்கள் சேர்ந்திருக்கிறார்கள், அது முழுமையான ஒரு திட்டமாக இருக்கிறது. என்ன விசயம் என்றால் நீங்கள் இந்தத் திட்டங்களைக் கொண்டு செல்வது, FSFTN-ன் முன்னெடுத்த திட்டமாக இருக்கவேண்டும். ஆனால் அதில் செய்வது எல்லாமே FSFTN-ன் மக்கள் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. நான் வருகிறேன், எனக்கு ஒரு விசயம் பிடித்திருக்கிறது என்றால் நான் அந்தத் துறையில் செயல்பட ஆரம்பிப்பேன்.

tamil menporul8உதாரணமாக இங்கே உள்ள நிறைபேருக்கு rails பிடிக்கும், அதேமாதிரி python பிடிக்கும். அப்படியென்றால் அவர்கள் அந்தத்துறையில் செயல்பட ஆரம்பிப்பார்கள். நாளைக்கு அவர்கள் வெளிநாடு சென்றுவிடலாம், FSFTN-ன் உறுப்பினராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அந்தத் திட்டங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். நாங்கள் Firefox ல் பண்ணினோம், அதன்பிறகு எங்களுடைய Project ஐ பார்த்தீர்கள் என்றால் koha என்கிற மென்பொருள் சம்பந்தப்பட்டது. koha என்பது Library Management Software. நூல்களை ஆவணப்படுத்துதல், அதை எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகலாம். நீங்கள் கன்னிமாரா நூலகங்களுக்கு சென்றீர்கள் என்றால் பழைய verson of koha வைத்திருப்பார்கள். அந்த மென்பொருட்களை முழுமையாக மொழிபெயர்ப்பதுதான் எங்களுடைய திட்டம், அதற்கான வேலைகள் சென்றுகொண்டிருக்கிறது. உதாரணமாக நீங்கள் வருகிறீர்கள், என்னால் தமிழ் இல்லாமல் பயன்படுத்தவே முடியாது, கடைக்கு பில் போட வேண்டும் என்று சொல்கிறீர்கள் என்றால் எங்களுடைய தன்னார்வாளர்களை வைத்துக்கொண்டு அதைக்கூட மொழிபெயர்த்துத்தர தயாராக இருக்கிறோம். எங்களுடைய பணி துறைசார்ந்து சுருங்கியது, கட்டற்ற மென்பொருள் சார்ந்து விரிந்திருக்கும்.

கேள்வி: தமிழ் மென்பொருளை உருவாக்குவதில் நீங்கள் சந்தித்த சிக்கல், சிரமங்கள் என்ன?

tamil menporul3பதில்: உருவாக்குவதில் சிக்கல்கள் கிடையாது. ஆனால் எந்த ஒரு உருவாக்குனருக்கும் தன்னுடைய தயாரிப்பை யாராவது பயன்படுத்துவதைப் பார்க்க வேண்டும். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இங்கே பிரச்சனை என்னவென்றால் தமிழ் மென்பொருட்களைப் பயன்படுத்தும் ஆட்கள் மிகக் குறைவு, இலவசமாகவே கொடுத்தாலுமே கூட. எங்களிடம் கேட்டீர்கள் என்றால் மலேசியாவிலிருந்து வருவார்கள், சிங்கப்பூரிலிருந்து வருவார்கள், அவர்கள் சொல்கிறார்கள் பள்ளிகளில் எல்லாம் உங்களுடைய மென்பொருட்களைப் போட்டு வைத்திருக்கிறோம், குழந்தைகள் எல்லோரும் உங்களுடைய தமிழ் பார்த்துத்தான் வளர்கிறார்கள் என்று சொல்வார்கள். அதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்குமே தவிர நம்மைப் பொறுத்தவரை உந்து சக்தி இல்லை என்பதுதான் விசயம். மக்கள் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.

கேள்வி: தமிழ்மொழி வளர்ச்சிக்கு தமிழ் மென்பொருள் எந்த அளவிற்கு பயன்படும்?

பதில்: முழுமையான அளவிற்குப் பயன்படும். அதாவது ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்த ஒரு மொழி தன்னை வந்து மாற்றிக்கொள்ளவில்லையோ அதுதான் அழிந்துபோகும். அதுதான் நாம் வரலாற்றில் நாம் பார்த்துக்கொண்டிருக்கிற விசயம். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஆங்கிலம் பேசிக்கொண்டு இருப்பவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் மொழிப் பிரச்சனை ஒவ்வொரு விதத்திலும் நடந்துவந்து கொண்டிருக்கும். உதாரணமாக ஆங்கிலம் பேசுபவர்களுக்கு சமற்கிருத கலப்பை நீக்குவதற்காக ஒரு சில விசயங்கள் நடந்திருக்கும். அப்படியான மொழிப்போர் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். இப்பொழுது தொழில்நுட்பத்துடன் மொழிப்போர். ஆங்கிலத்தைப் பார்த்தீர்கள் என்றால் எல்லா வார்த்தைகளையும் சொல்லுகிறோம், எல்லாமே grid-ல் இருந்து தன்னை ஆங்கிலம் adapt பண்ணிக்கொள்வதால்தான் வந்துகொண்டிருக்கிறது. இங்கு தமிழிலும் அதுதான் விசயம். எனவே எவ்வளவு தூரம் நீங்கள் adapt பண்ணிக்கொள்கிறீர்களோ அதுதான். இப்பொழுது எல்லோருமே கணினி சார்ந்து வளர்ந்துவந்துவிட்டார்கள். கணினியில் இந்தத் தமிழ் மொழி எவ்வளவு adapt ஆகிறதோ அவ்வளவு தூரம் மொழி நிலைத்து நிற்கும் இல்லையென்றால் இப்பவே அமெரிக்கா செல்லும் பிள்ளைகளுக்கு தமிழ் தேவைப்படுவதில்லை. பிரச்சனை என்னவென்றால் அவர்கள் படிக்காமல் வருகிறார்கள். இந்த மொழி கணினியைப் போன்ற தொழில்நுட்ப சாதனங்களுக்குள் எந்த அளவுக்கு நுழைந்து பயன்பாடு அதிகரிக்கிறதோ அவ்வளவு தூரம் அதனுடைய வாழ்நாள் அதிகமாகும். நாளைக்கு கணினி மாதிரி வேறு ஒன்று வரலாம், அலைபேசியில் தமிழ் வருவதுவும் அப்படிப்பட்ட ஒன்றே. இது மொழி வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான செயல்.

கேள்வி: தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் தோற்றம்?

tamil menporul7பதில்: இது தன்னார்வாளர்களால் நடத்தப்படும் ஒரு நிறுவனம். இதை யார் ஆரம்பித்தது என்ற பெயர்கள் தெரியாது. ஏனென்றால் 2008ல் ஒருவர் ஆரம்பித்தார். ஒரு சில குழு மக்கள் ஆந்திராவில் இருந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் சில விசயங்கள் செய்யவேண்டும் என்ற திட்டம் இருந்தது. அப்பொழுது பிரதான நோக்கம் என்னவென்று பார்த்தீர்கள் என்றால் கட்டற்ற மென்பொருளை பரப்புவதுதான். அந்தத் துறையில் மென்பொருளை பயன்படுத்துபவர்கள், கட்டற்ற மென்பொருளை அறியாமையினால் பயன்படுத்திக்கொண்டு இருப்பார்கள் அதாவது ஒருமுறை விக்கிபீடியா பயன்படுத்தியிருந்தீர்கள் என்றால் நீங்கள் கட்டற்ற மென்பொருளை பயன்படுத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் நிறையபேருக்கு நாம் கட்டற்ற மென்பொருளை பயன்படுத்திருக்கிறோம் என்பதே தெரியாது. அதை கொண்டுபோய் சேர்க்க வேண்டும். உங்களிடம் Britannica Encyclopedia, விக்கிபீடியா Encyclopedia-வும் கொடுத்தோம் என்றால் சிலபேர் என்ன செய்வார்கள் என்றால் எது சிறந்ததாக இருக்கிறதோ, அப்போதைக்கு அந்தப் பக்கம் சென்றுவிடுவார்கள். இதை விரிவாக்க முடியும், இதை மக்களால் உருவாக்கப்பட்டது என்ற கொள்கை பிடிப்பு நிறைய பேருக்கு வரும். ஆனால் அது தெரிந்தால்தான் வரும், நிறையபேருக்குத் தெரியாது. அந்த விசயங்களை கொண்டு சேர்ப்பதற்காகத்தான் அந்த அமைப்பு போய்க்கொண்டிருந்தது. அதில் பார்த்தீர்கள் என்றால் நான் ஏற்கனவே சொன்னமாதிரி தமிழ் மொழி தெரிந்தவர்கள் நிறைய இல்லை அரங்கத்தில். அதனால் அந்த இடைவெளி அடிக்கடி இருக்கும். நிறையபேர் செயலாளராக இருந்தவர்களே மாறி மாறி வந்திருக்கிறார்கள். அதன்பிறகு பார்த்தீர்கள் என்றால், ஆரம்ப கட்டத்தில் ஆரம்பிக்கும் பொழுது சிபி இருந்தார், அதன் பிறகு இடையில் சிறிது காலங்களாக அவர் இல்லை. அதன்பிறகு தமிழ் மக்கள் நிறையபேர் உள்ளே வர ஆரம்பித்துவிட்டார்கள். அலுவல் மொழி தமிழாகவே ஆகிவிட்டது.

தமிழ் தெரியாதவர்கள் இங்கே அவ்வளவாக கிடையாது. ஏனென்றால் இது தன்னார்வளார்களால் இழுத்துக்கொண்டே வருவதால் அந்த போக்கும் மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக பரப்புரை மட்டுமே என்று இருந்த நோக்கம் மாறி இப்பொழுது மக்களை தொழில்நுட்பத்தில் முன்னேற்றவேண்டும் என்பதால் தொழில்நுட்பத்தில் உள்ள ஈடுபாடு நிறைய போய்க்கொண்டிருக்கிறது, நிறைய திட்டங்களில் பங்களிக்க ஆரம்பிக்கிறார்கள். அதேமாதிரி நிறைய திட்டங்களை ஆவணப்படுத்துகிறார்கள். இப்பொழுது புது மக்களை வைத்தே நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான நிறைய திட்டங்கள் போய்க்கொண்டிருக்கிறது. இதுதான் வளர்ச்சி என்று சொல்லலாம். இப்பொழுது 2008ல் ஆரம்பித்தவர்களில் எனக்குத் தெரிந்து சிபி மட்டும்தான் இருக்கிறார், வேறு யாருமே இப்போதைக்குக் கிடையாது.

கேள்வி: தங்களைப் பற்றிய அறிமுகம்?

பதில்: என்னுடைய பெயர் அரவிந்த், நான் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவன். நான் கோவையில் ஒரு கல்லூரியில் B.E படித்திருக்கிறேன். படித்து முடித்துவிட்டு இங்கு சென்னையில் வேலை செய்துகொண்டிருக்கிறேன். கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையில் 2013ல் இணைந்தேன். வருடாவருடம் ஐந்து நாட்கள் கோடைகால முகாம் (summer camp) நடத்துவார்கள். அதற்கு முன்பு நிறைய முறை இவர்களுடன் கலந்து பேசியிருக்கிறேன். ஒருமுறை Richard Stallman வந்திருந்தார். கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையை அவர்தான் முதன்முதலில் துவங்கினார் 1980களில். FSFTN அழைத்து வந்தார்கள் IIT Madras ல் பண்ணியிருந்தார்கள். அதற்கு நான் வந்திருந்தேன். அதற்கு முன்பு கட்டற்ற மென்பொருள் தினம் என்று வருடம் ஒருமுறை நடத்துவார்கள். செப்டம்பர் மாதம் நடக்கும், தேதி ஒவ்வொரு வருடமும் மாறும். அப்பொழுது சந்தித்திருக்கிறேன். அதன்பிறகு கோடைகால முகாம் (summer camp) வந்ததற்குப் பிறகு நான் இதில் இணைந்தேன்.

கேள்வி: தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் பணிகள்?

பதில்: பொதுமக்களுக்கு கட்டற்ற மென்பொருள் பற்றிய விசயங்களைக் கொண்டுபோய் சேர்ப்பதுதான் முக்கியமான பணி. பொதுமக்கள், மாணவிகள், கல்லூரியில் வேலை செய்பவர்கள், பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் இவர்களுக்கெல்லாம் கொண்டு செல்வதுதான் முக்கியமான வேலை, அதுதான் பிரதான வேலை. அதில் தொழில்நுட்ப பயிற்சி பண்ணுவோம், ஒரு வருடகாலமாக தொழில்நுட்பமாக நிறைய பண்ணுகிறோம். பேசுவதையும் தாண்டி தொழில்நுட்பமாக பங்களிப்பதற்கான முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதுபோக எங்களுடைய வேலை என்னவென்றால் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, என்ன பண்ணமுடியுமோ, கட்டற்ற மென்பொருள், கட்டற்ற அறிவு சார்ந்த விசயங்களை செய்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்து வேலை செய்வது, அவர்களுக்கான ஊக்கம் கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறோம். விக்கிபீடியாவில் தமிழ் பங்களிப்பில் FSFTN-யினுடைய ஆட்கள் நிறையபேர் செய்துகொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு சிபி, அருண், சுதிர், சஃபியா போன்ற எல்லோருமே நிறைய செய்திருக்கிறார்கள். இவர்கள் விக்கிபீடியாவிலும் பங்களிப்பு அளித்திருக்கிறார்கள். எங்களுடைய வேலை இது சார்ந்துதான் இருக்கும். முக்கியமாக இன்றைக்கு இருக்கிற மாணவர்களுக்கு கட்டற்ற மென்பொருள் என்பது மிகவும் முக்கியமான ஒரு விசயம். அருண் சொல்லியிருந்தார் இல்லையா, கட்டற்ற மென்பொருளை நீங்கள் பயன்படுத்திருப்பீர்கள் ஆனால் பயன்படுத்தியதே உங்களுக்குத் தெரியாது. இது சிறிய பிரச்சனை இல்லை, ஒரு பெரிய பிரச்சனை. ஏனென்றால் உதாரணத்திற்கு ஒரு மடிக்கணினி வாங்குகிறீர்கள் Microsoft Windows-வுடன் வருகிறது என்றால் அது கட்டற்ற மென்பொருள் கிடையாது. அதை ஏழாயிரம், எட்டாயிரம் கொடுத்துதான் வாங்கவேண்டும். அது காசு சம்பந்தப்பட்ட விசயம். ஆனால் அந்த மென்பொருள் எப்படி வேலை செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது.

tamil menporul11ஒரு மாணவன் அதிலும் முக்கியமாக ஒரு பொறியாளர் உள்ளே இருப்பது எப்படி வேலை செய்கிறது என்று தெரியவில்லை என்றால் பயனில்லை. பொறியியல் படித்ததற்கான அர்த்தமே கிடையாது. அதை உடைத்து வெளியில் எரிந்து கட்டற்ற மென்பொருள் GNU / LINUX சொல்லப்படுகிற இயங்கு தளத்தை ஒவ்வொரும் அறிந்திருக்க வேண்டும். GNU / LINUX அவரவர் கணினியில் போட்டு எப்படி பயன்படுத்துவது, அதில் என்னமாதிரி பண்ணலாம், அதனுடைய source code-ஐ எப்படி படிப்பது இந்த மாதிரி வேலைகளை சொல்லிக்கொடுப்பது, இது மட்டுமல்ல GNU / LINUX என்பது சிறிய பகுதிதான். கட்டற்ற மென்பொருள் சிறிய உலகம் கிடையாது, மிகப்பெரிய உலகம். இந்த உலகத்தில் நிறைய விசயங்கள் இருக்கிறது. ஒரு சிறிய உதாரணமாக நாம் சொல்லவேண்டும் என்றால் உலகத்தில் 98 சதவிகிதம் server, இலவச மென்பொருளில்தான் ஓடுகிறது. உங்களுடைய ஆன்ட்ராய்டு மொபைலில் இருக்கிற ஆன்ட்ராய்டு கட்டற்ற மென்பொருள் ஒரு சிலவற்றில் இருக்கலாம். அது open source, கட்டற்ற மென்பொருள் கிடையாது. பார்க்கவில்லை என்றால் ஓரளவிற்கு open source என்று ஒத்துக்கொள்ளலாம். உலகத்தில் நமக்குத் தெரியாமல் இந்த மாதிரி பல விசயங்கள் இருக்கிறது, இது மாணவர்களிடம் போய்ச்சேரவேண்டும் என்ற முக்கியமான நோக்கத்தோடு தீவிரமாக வேலைசெய்துகொண்டிருக்கிறோம் அந்தப் பகுதியில். தமிழ் சார்ந்த வேலைகளை இனி வரும் காலங்களில் நிறைய செய்வோம்.

tamil menporul10தமிழ் சார்ந்த வேலைகள் என்றால் Tamil 99 விசைப்பலகையை பயன்படுத்தியிருப்போம், நிறையபேருக்கு இதை பயன்படுத்தத் தெரியாது. அதற்கு பதிலாக phonetic பயன்படுத்துவார்கள். இப்பொழுது அம்மா என்று தட்டச்சு செய்யவேண்டும் என்றால் AMMA என்று தட்டச்சு செய்தால் அம்மா என்று வரும். இந்த font எல்லாமே இலவசமா என்று எங்களுக்குத் தெரியாது. Font களிலே இலவச Fontஐ செய்யலாம் என்று இருக்கிறோம். அதனுடைய தொழில்நுட்பம், சிரமங்களைப் பொறுத்து செய்வது என்பது வேறு விசயம் ஆனால் செய்வோம். முடியும் ஆட்கள் இருக்கிறார்கள். அதில் முக்கியமான ஒரு வேலையாக நாங்கள் செய்யலாம் என்று வைத்திருக்கிறோம் என்றால் புயஅநள மாதிரி தயார் செய்யலாம். உதாரணத்திற்கு ஆங்கில விசைப்பலகையை பார்த்தீர்கள் என்றால் அதைக் கற்றுக்கொள்வதற்கு எழுத்துக்கள் எல்லாம் விளையாட்டு மாதிரி வரும். ABCD என்று பலூன் வரும், A யை வேகமாக அழுத்தினால் அது உடையும். ஒரு point சேரும். இந்த மாதிரி செய்திருக்கிறார்கள். இது எதற்காக என்றால் மகிழ்ச்சியாய் விசைப்பலகையை வேகமாக கற்றுக்கொள்வதற்கு. இதை எல்லோரும் செய்திருப்பார்கள். இது தமிழில் கிடையாது. இதை தமிழ் 99 விசைப்பலகைக்கு இதை கொண்டுவருவது என்பது மிக முக்கியம். அதை சார்ந்த வேலைகளில் நாங்கள் கண்டிப்பாக ஈடுபடுவோம். அதுபோக தமிழ் விக்கிபீடியாவிற்கு ஏதாவது செய்வதாக இருந்தாலும் செய்யலாம். தமிழை தட்டச்சு செய்வதற்கு சங்கப்பட்டுக்கொண்டு நிறையபேர் பயன்படுத்தாமல் இருப்பார்கள். அதை உடைப்பதற்கு இது ஒரு முக்கியமான வழியாக இருக்கும்.

பதில்(சிபி): 2011,12 சமயங்களில் Community Computer Centre என்ற ஒன்றை ஆரம்பித்து நடத்திவந்தோம். மயிலாப்பூரில் ஒரு இடத்தில் ஒரு சிறிய அறையில், அந்த இடத்தில் இருக்கும் அரசு பள்ளிக்குழந்தைகளுக்கு கட்டற்ற மென்பொருள்களை கற்றுத்தருவது என்பது மாதிரி ஆரம்பித்தோம். இயங்கு தளத்தை தமிழில் போட்டு, தமிழில் நான்கைந்து கணினிகள் இருந்தது, ஆங்கிலத்தில் நான்கைந்து கணினிகள் இருந்தது. இதில் அவர்கள் வந்து கற்றுக்கொள்வது. இங்கு சொல்லித்தருவது மாதிரி கிடையாது. அவர்கள் வருவார்கள், நாங்கள் அமர்ந்து பேசுவோம், இதைப்பற்றி பேசுவோம், ஊரில் என்ன நடந்தது என்பதைப்பற்றி பேசுவோம். இப்படி பொதுவான விசயங்களோடு சேர்ந்து கணினி அதாவது கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன?, கட்டற்ற அறிவு என்றால் என்ன?, அதைப்பற்றி என்னவெல்லாம் செய்யப்போகிறோம் என்று பேசுவோம். இதை தன்னார்வாளர்கள் தான் நடத்தினார்கள், அவர்களுடைய வளர்ச்சி குறைந்ததால் அதைத் தொடரமுடியாமல் போய்விட்டது. இப்பொழுது அதை தொடர்வதற்கான முயற்சியை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

tamil menporul4அதற்கடுத்ததாக ஆங்கிலத்தில் விக்கிபீடியாவில் பாகங்கள் குறிக்கிற படங்கள் அது எல்லாமே அதில் இருக்கும். ஒரு கட்டற்ற மென்பொருள் இருக்கிறது, அதன் பெயர் inscape அல்லது gimp என்று சொல்வார்கள். அதை பயன்படுத்தி தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை என்ன செய்கிறது என்றால் கிட்டத்தட்ட ஒரு 150 படங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழ் விக்கிபீடியாவுக்குக் கொண்டு வந்தோம். நீங்கள் என்ன செய்யத்தேவையில்லை என்றால் முதலிருந்தே படத்தை வரையத்தேவையில்லை. அந்தப் படம் இருக்கும் அதற்கான பாகங்கள் எங்கெங்கு இருக்கிறது என்பதைக் கேட்டு, சரியாக land பண்ணி கொண்டு வந்தோம். இதனை வெளியிலிருந்து பார்க்கும்பொழுது அதனுடைய மலைப்புத்தன்மை தெரியாது. ஆனால் உள்ளிருந்து பார்த்தீர்கள் என்றால் கிட்டத்தட்ட 100 மனித நாட்களை(Man days) நீங்கள் சேமித்திருப்பீர்கள். ஏனென்றால் எல்லாவற்றையும் நீங்கள் முதலிருந்தே செய்யவில்லை. இப்படி சின்ன சின்ன விசயத்தில் ஆரம்பிக்கும் பொழுது இந்த கட்டற்ற இடத்துக்குள் நாம் போகவேண்டும் என்று தோன்ற ஆரம்பிக்கும். அது ஒரு மிகப்பெரிய சாதனையாகவே நான் பார்க்கிறேன். மிக சிறிய விசயங்கள் என்ன ஆரம்பித்திருக்கிறோம் என்றால் சுவரொட்டி போடும் பொழுது, ஆங்கிலத்திலேயும் ஒன்று போட்டோம் என்றால், தமிழில் ஒரு நிகழ்வு நடக்கிறது என்றால் தமிழிலும் ஒன்று போடுவது. அதற்கான மென்பொருட்கள் நிறைய இருக்கிறது. அதே மாதிரி Libre office என்று சொல்வார்கள். Libre office-ஐ மலேசியாவில் ஒரு குழு தன்மொழியாக்கம் பண்ணியிருக்கிறார்கள். போன வருடம் பார்த்தீர்கள் என்றால் tamil virtual academy ல் அதனுடைய வெளியிட்டுவிழா, இப்படி ஒரு விசயம் இருக்கிறது, அதில் சொல் திருத்தி எல்லாம் இருக்கிறது, இலக்கணப் பிழைத் திருத்தி இந்த மாதிரியான விசயங்கள் எல்லாம் இருக்கிறது. இதெல்லாம் மைக்ரோசாப்ட் வின்டோஸில் கிடையவே கிடையாது. அந்த மாதிரியான விசயங்களில் மக்கள் அதிகமாக வரும்பொழுது இன்னும் நடக்க ஆரம்பிக்கும்.

கேள்வி: இந்த அறக்கட்டளைக்கு மற்றவர்கள் வரவேண்டிய அவசியம் என்ன?

பதில் (சுதிர்): நாங்கள் என்ன படித்தோம், நாங்கள் இந்த அரங்கத்தில் என்ன மாதிரியான பணிகளைச் செய்தோம் என்பதை ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருந்தோம். இதிலிருந்தே இந்த விசயம் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது எந்த மாதிரியான பணிகளை இந்த அரங்கம் செய்துகொண்டிருக்கிறது, அது மக்களுக்கு நேரடியாக எந்த வகையில் பயனளிக்கும், அதற்கு ஒவ்வொருவரும் எந்த மாதிரியான பங்களிப்பை செய்யவேண்டும் என்ற விசயத்திலிருந்துதான் ஒவ்வொருவருடைய தேவையும் அதிகரிக்கிறது. நாங்கள் 2008ல் ஆரம்பிக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட அளவு குறைந்த நபர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைக்கு அதன் பணிகள் சென்னை இல்லாமல் எல்லா மாவட்டங்களுக்கும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதில் குறிப்பாக நிறையபேரின் பங்களிப்போடுதான் இந்த அரங்கத்தின் செயல்பாடுகள் விரிவடைந்திருக்கிறது. இன்னும் கூடுதலான நபர்கள் இந்த அரங்கத்தில் இணையும் பொழுது தமிழுக்கோ, தமிழ் சார்ந்த மென்பொருள் உருவாக்கத்திற்கோ அல்லது நமது தமிழ் மொழிக்கோ அல்லது பொதுவாக நம்முடைய தமிழ் சமூகத்திற்கான அறிவு வளர்ச்சிக்கு இந்த தொழில் நுட்பங்களைக் கொண்டு போய் சேர்ப்பதற்கு கூடுதலான பங்களிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். நாங்களும் அந்தப் பணிகளில் எப்படியெல்லாம் இந்த அரங்கத்தில் பணி செய்வது, அரங்கத்தில் சேர்ப்பது, அவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது, இதனுடைய வேலையே கல்லூரிகள், பள்ளிகள் என்று எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, மக்கள் யாரெல்லாம் விருப்பம் கொள்கிறார்களோ அவர்களிடம் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டிருக்கிறோம். கொண்டுசேர்க்குமிடங்களில் கூடுதலான நபர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். எங்களுடைய பணிகளும் விரிவடைந்துகொண்டிருக்கிறது. இன்னும் நிறையபேர் வர ஆரம்பிக்கும் பொழுது இந்தப் பணி இன்னும் முழுவீச்சாக நடைபெறும்.

கேள்வி: இணையம் பயன்படுத்தும் இந்தக் கால தலைமுறைக்கு இறுதியாக தாங்கள் சொல்ல விரும்புவது என்ன?

fsftn1பதில்(பிரகாஷ்): செய்திகளைப் பார்த்து மக்கள் ஏமாந்து விடுகிறார்கள். இணையம் என்பதுமட்டும் கிடையாது, எதைப்பொறுத்து நடந்தாலுமே அது அப்படித்தான் நடக்கிறது. ஏனென்றால் இன்று பெரிய நிறுவனங்கள் என்ன செய்கிறார்கள் என்றால், serverஐ cloud க்கு மாற்றிவிடுங்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். மக்களும் cloud ஒருபெரிய வெற்றிபெற்ற மாதிரியாக பார்க்கிறார்கள். அதாவது Cloud என்றால் மேகக்கணினி என்று சொல்வோம். அதாவது server-ஐ நீங்களாக வைத்துக்கொள்ளாமல், நிறுவனங்கள் server-ஐ தருவார்கள், அந்த server-ல் நீங்கள் நிறுவுவீர்கள். உங்களுக்கே ஒரு இணையதளம் வேண்டும் என்றால் நீங்கள் உங்களுக்கென்று தனியாக ஆரம்பிக்காமல் google blogger வைத்திருப்பார்கள், அதில் நீங்கள் பதிவு செய்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு இணையதளம் கிடைத்துவிடும். சிறிது காலத்திற்கு முன்பு ரவி என்று விக்கிபீடியாவில் programme director. அவர் என்ன சொல்கிறார் என்றால், “இந்தத் தொழில் நுட்பங்கள் எல்லாம் வந்தபின்பு மக்கள் எல்லோரும் நிறைய அலைபேசியை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இப்பொழுது விக்கிபீடியா என்ற கட்டற்ற களஞ்சியத்தில் பயனர்கள் திருத்தம் செய்யும் முறை இருப்பதினால்தான், அது மென்மேலும் பெரிதாகிக்கொண்டே இருக்கிறது. அலைபேசி பயன்படுத்துவதினால் என்ன பிரச்சனை வருகிறது என்றால், மக்கள் பார்ப்பதோடு போய்விடுவார்கள், ஏனென்றால் அலைபேசியில் திருத்தம் செய்ய முடியாது”.

Apps - Tile Icons on Smart Phoneஇப்பொழுது அனைவரும் app-ஐ தரவிறக்கம் செய்யுங்கள் என்பது ஒரு கலாச்சாரமாகப் பார்க்கப்படுகிறது. அதில் தரவிறக்கம் செய்தால் 50 ரூபாய், 20 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் என்பதைப் பார்த்துவிட்டு, அப்படியே சென்று விடுகிறார்கள். App பயன்படுத்துவதினால் என்ன பிரச்சனை என்றால், இப்பொழுது flipkart என்று எடுத்துக்கொண்டீர்கள் என்றால், இணையத்தில் பார்க்கும் பொழுது 100 தயாரிப்புகளைப் பார்க்கும் நபர், App-ல் நேரம் போய்க்கொண்டிருக்கும், அதனால் இரண்டு அல்லது மூன்று தயாரிப்புகளைப் பார்த்துவிட்டு சுலபமாக சமரசம் ஆகிவிடுவார்கள். முதலாளியாக இருப்பவருக்கு அது சந்தோசமான விடயம்தான். ஏனென்றால் நிறைய வாய்ப்புகளைப் பார்க்கமுடியாது. app என்றால் flipkartல் மட்டும்தான் பார்ப்பேன், நான் snap dealக்கு போய் பார்க்கமாட்டேன், ஆனால் இணையதளம் என்றால் அப்படி கிடையாது, நிறைய பார்க்கலாம். அதற்குப்பின் இருக்கிற அரசியல் என்பது பெரியவிடயம்.

Cloud மாதிரியான இயங்கு தளம் வந்தபிறகு மென்பொருள் நிரல்களைத் தரவேண்டியதில்லை. நிறைய சேவைகளை முடக்குவது மாதிரியான வசதிகள் எல்லாம் வந்துவிட்டது. விக்கிபீடியாவை அலைபேசியில் பார்க்க ஆரம்பித்தார்கள் என்றால் அந்த பயனர்களால் விக்கிபீடியாவிற்கு பலனே இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் உள்ளடக்கத்தை செழுமைப்படுத்தப்போவது கிடையாது. இந்த மாதிரியான சிக்கல்கள் இருக்கிறது. நாளைக்கு அலைபேசியில் திருத்தம் செய்வதற்கான வசதி வரலாம். என்னவென்றால் அரசியலைப் புரிந்துகொண்டு நடந்துகொள்ளவேண்டும். Microsoft பயன்படுத்துவதனால் சுலபமாக பயன்படுத்துவதுமாதிரி இருக்கிறது, ஆனால் அதை பயன்படுத்துவதினால் நிரலாக்கம் என்பது, மென்பொருட்களை நாமே செய்யலாம் என்ற நம்பிக்கை இன்றைய இளைய தலைமுறைக்கு பெருமளவு போய்விட்டது. அவர்களால் ஒரு தனி இணையதளத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையே கிடையாது. அதற்குக் காரணம் என்னவென்றால் வின்டோஸ் பயன்படுத்துவதால்தான். இதே மாதிரி அலைபேசியோ, டேப்லட்டோ பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு, நாம் எழுதவே முடியாது என்கிற சூழல் வந்துவிடும், தமிழ் மறந்துபோகிற சூழல்கூட வந்துவிடலாம். அநேக நபர்கள், பழைய சைனா அலைபேசிகள் வைத்திருப்பவர்களுக்கு தமிழை எப்படி தட்டச்சு செய்வது என்பதே தெரியாது. அப்படியென்றால் அவர்களுக்கு படிக்கத்தெரியும், எழுதத்தெரியாது என்று அர்த்தம், அப்படியென்றால் கை முடங்கிய ஒரு நபராக நீங்கள் வாழ ஆரம்பித்துவிடுகிறீர்கள். சிறிது நாட்கள் கழித்து யானையை சங்கிலியில் கட்டிப்போடுவது மாதிரிதான் சிறிது நாட்கள் கழித்து தமிழில் எழுதுவது வந்தாலும் கூட, அதை எழுதமுடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கவே இருக்காது. எனவே அதற்கு முயற்சிகூட இல்லாமல் போய்விடும். நீங்கள் எங்கே சென்றாலும் சரி, எந்த ஒரு விடயத்தை செய்தாலும் சரி அதில் என்ன இருக்கிறது என்று கற்றுக்கொண்டு அதை நீங்கள் உருவாக்க ஆரம்பிக்கவேண்டும், அதுதான் முக்கியமான விடயம்.

இப்பொழுது நெட்நியூட்ராலிட்டி என்பது முன்னிலைப்படுத்தி வந்துகொண்டிருக்கிறது. ஒரு இணையம் இருக்கிறது, அதில் flipkart, snapdeal இருக்கிறார்கள் என்றால், airtel உடன் deal வைத்துக்கொண்டு flipkart வந்துவிட்டார்கள் என்றால் அவர்கள் சேவை மட்டும் வேகமாக இருக்கும், மற்ற சேவைகள் எல்லாம் குறைவாக இருக்கும். இதனால் நான் புதிதாக இணைய அங்காடி ஆரம்பிக்க வேண்டும் என்றால், என் பெயரில் நான்கு புத்தகங்கள் விற்கவேண்டும் என்று நினைக்கிறேன் என்றால், என்னுடையதை யாரும் பார்க்க வரமாட்டார்கள், ஏனென்றால் அவர்களுடையது வேகமாக உள்ளது, இரண்டாவது இலவசமாகவும் இருக்கும். அதனால் அதைத்தான் பார்ப்பார்கள், என்னுடையதை 20 ரூபாய் கொடுத்துதான் பார்க்கவேண்டும் என்ற சேவை இருக்கும், அதில் நான்கு புத்தகங்கள்தான் தருகிறேன். நான் சிறிய அளவில் வழங்குபவர் (provider). மற்றவர்கள் பெரிய அளவில் வழங்குபவர் (provider), இலவசம் வேறு, அதனால் அதைப் பார்ப்பவர்கள் மிக அதிகமாக இருக்கிறார்கள். அது ஒரு பெரிய சவாலாக இருக்கும். எனவே அதை நோக்கி போராட வேண்டிய தேவை இருக்கிறது.

fsftn10இப்பொழுது பார்த்தீர்கள் என்றால் MTS 0, Airtel 0 என்று வருகிறது. Boost pack என்பதெல்லாம் ஒரு விதமான திருட்டு என்றுதான் சொல்லவேண்டும். இப்பொழுது நீங்கள் facebook pack போடுங்கள் என்று சொல்வார்கள். facebook pack போட்டுவிட்டு இணையத்தில் இணைந்தீர்கள் என்றால் பின்னால் கூகுள் update ஆகும். எனவே உங்களுடைய இணையவசதி முடிந்துவிடும், இருப்பு அனைத்தும் தீர்ந்துவிடும். அவர்களிடம் கேட்டீர்கள் என்றால் உங்களுக்கு அது போய்விட்டது, இது போய்விட்டது என்று கூறுவார்கள். இதெல்லாம் ஒரு திருட்டுதான். எனவே இதை நோக்கி நெட் நியூட்ராலிட்டியைப் பற்றி புரிந்துகொண்டு அதைப்பற்றிய விழிப்புணர்வோடு இருப்பது மிகவும் அவசியம். இது போக இன்னொரு விடயம் என்னவென்றால் mesh network என்று ஒன்று இருக்கிறது. அதாவது எப்படியென்றால் எந்த ஒரு provider-ஆக இருந்தாலும் சரி உதாரணமாக Airtel Internet எடுத்துக்கொள்வோம், Airtel-ல் Broadband தருகிறேன் என்று சொல்வார்கள், அதிவேகமான இணையம் என்று சொல்கிறார்கள், நீங்கள் சென்று பார்த்தீர்கள் அவ்வாறு இருப்பதில்லை. எனக்குத் தெரிந்து 12 நகரங்களில் மட்டும்தான் provider solution தருகிறார்கள், மற்ற இடங்களில் தருவதில்லை. நீங்கள் போரூர் பகுதிகளில் பார்த்தால் Reliance இருக்காது. ஏனென்றால் அங்கு அவர்களுக்கு லாபகரமான தொழில் நடக்காது. சென்னையிலே கூட போரூர் பகுதியில் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் கம்பிவட இணைப்பை (wired internet) எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னமும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சமிக்ஞை கிடைக்காது, வேகம் அதிகமாக இருக்காது, அதனால் wireless internet -ஐ சேர்ப்பது இல்லை. அதனால் நம்பகமான இணையம் வேண்டும் என்றால் இணைக்கப்பட்ட இணைப்பை போடுவார்கள். அதனை பார்த்தீர்கள் என்றால் லாபநோக்கோடுதான் செயல்படுகிறது.

இன்னும் சிறிது நாட்களில் பார்த்தீர்கள் என்றால் உத்திரமேரூரில் ஒருவருக்கு இணையம் வேண்டும் என்றால் ஒரே ஒரு இணைப்பு மட்டும் இருக்கிறது என்றால் எதுக்கு ஒருவருக்கு மட்டும் இணைப்பு கொடுக்கவேண்டும் என்று இணையத்தை எடுத்து விடுவார்கள். இனிமேல் இணையம் அத்தியாவசிய பொருட்களாகிவிட்ட பின்னால் இந்த மாதிரியான சேவை தனியார் நிலையத்தில் போவதால் சிக்கல்கள் ஏற்படுகிறது. அவர்களால் அதை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது. ஏனென்றால் மற்ற உலகத்திலிருந்து அவர்கள் தனிமைப்பட்டு போய்விடுவார்கள். இன்று பார்த்தீர்கள் என்றால், ஏன் உன்னுடைய கல்யாணத்திற்கு சொல்லவில்லை என்றால், நான்தான் facebook ல் போட்டுவிட்டேனே என்பார். அப்படியென்றால் நீங்கள் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டு போய்விடுவீர்கள். எனவே உங்களுக்கு இணையம் அவசியமாகிறது. தனியார் நிறுவனங்கள் அதைக் கொடுக்கத் தயார் கிடையாது. எனவே மக்களால் மக்களுக்கே என்று இணையத்தை விரிவுபடுத்தவேண்டிய தேவை இருக்கிறது.

இப்பொழுது இருக்கிற நிறுவனங்களைப் பார்த்தீர்கள் என்றால் அரசின் கட்டுப்பாட்டில் நிறுவனம் இருக்கிறது. இணையத்தின் கருத்தே decentralization என்று சொல்லுவோம். decentralization என்றால் ஒரு மையப்புள்ளியில் இணைக்கப்படவில்லை என்பதுதான். மையப்புள்ளியில் இணைக்கப்பட்டிருக்கிறது என்றால் அதாவது நான் சொல்கிறேன், நான் சொல்வதுமட்டும்தான் நடக்கும் என்பது centralization. Decentralization என்றால் பரவலாக்கப்பட்டது, கட்டுப்பாடே இல்லாமல் அதுவாக செயல்படுவதுதான். இணையம் என்பது அதுவாக செயல்படுவதுதான், ஆனால் நாங்கள் சேவையை வழங்குகிறோம் என்று அங்கு வந்து கிடுக்குப்பிடி போடுகிறார்கள். இந்திய அரசாங்கம் பல இணையதளங்களை தடை செய்திருக்கிறது. இணையதளம் என்பது அவரவர்களுடைய விருப்பம் சார்ந்த ஒரு விடயம். இதில் அரசாங்கம் கட்டுப்பாடு விதிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் IPV6ல் குறிப்பிட்ட முகவரிதான் தருவேன் அதுவரை விடவேமாட்டேன் என்று IPV6-ஐ இந்திய அரசாங்கம் தடைவிதிக்கிறது. இவையனைத்தும் தனிநபரின் உரிமையை பறிக்கிற ஒரு விடயம். இதில் பிரச்சனை என்னவென்றால் ISP-யை அரசாங்கம் கொடுக்கிறார்கள், இந்த network எல்லாம் அரசாங்கம் அங்கீகரித்து அவர்கள் மூலமாக நடந்து கொண்டிருப்பதால்தான் இது நடக்கிறது.

இப்பொழுது ஐரோப்பா மாதிரியான நாடுகளில் பார்த்தீர்கள் என்றால் mesh network என்று ஒன்று வந்துவிட்டது. அதாவது மக்கள் அவர்களாகவே ஒரு  இணைப்பு வலையை தயார் செய்து இணையத்தை பகிர்ந்துகொள்வார்கள். இந்த வலைக்கு அந்த அரசாங்கம் கட்டுப்பாடு விதிக்காது, எந்த ஒரு தனி நபரும் கட்டுப்படுத்த மாட்டார்கள். இந்த மாதிரியான இணைப்புகள் வளர ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது tar-யைப் பார்த்தீர்கள் என்றால் அதற்குள் ஒரு Decentralization network தனியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. யாராலும் கட்டுப்படுத்த முடியாத இணையம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த இணையத்தை வளர்த்து எடுக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.

மேலும் digital divide என்று பெரிதாகப் போய்க்கொண்டிருக்கிறது. அதாவது தொழில்நுட்பத்தை ஒருவருக்கு கிடைக்கவிடாமலே செய்துவிடுகிறார்கள். அரசாங்கம் மடிக்கணினி தந்தது. முதலில் கொடுத்த மடிக்கணினியில் wifi கிடையாது, இப்பொழுது கொடுத்த மடிக்கணினியில் wifi இருக்கிறது. இணையம் என்றால் கம்பிவட இணைப்பு (wired internet) மட்டும்தான் போடவேண்டும். கம்பிவட இணைப்பு (wired internet) யாரும் கொடுக்க மாட்டார்கள், தனியார் துறையும் கொடுக்காது. அரசாங்கமும் கை காசிலிருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் மக்களிடம் கணினி மற்றும் எல்லாமே இருக்கும் ஆனால் அவர்களால் எதுவும் செய்யமுடியாது. அப்படியான ஒரு தனிமையாதல் என்பது இருக்கிறது. இணையத்தின் விலையை 1 GB250 ரூபாய் என்று ஆக்குகிறார்கள். அதனால் வரம்பற்ற இணையம் என்ற கருத்தே இல்லாமல் செய்துவிட்டார்கள். அதனால் Internet என்ற சேவை கிடைக்காத ஒரு விடயமாக ஆக்கி விடுகிறார்கள். எல்லா சேவையையும் அரசாங்கம் இ-சேவையில் கொடுப்போம், digital இந்தியா உருவாக்குவோம் என்று சொல்லி எல்லாவற்றையும் இணையத்தில்தான் எல்லாவற்றையும் செய்வார்கள் ஆனால் இணையம் உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது. அப்படியானால் இந்த சேவைகள் எல்லாவற்றையும் எப்படி பயன்படுத்துவீர்கள். அந்த கேள்வி ஒன்று இருக்கிறது. அதை நோக்கியும் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியிருக்கிறது, அதை நோக்கி நகரவேண்டிய தேவைகள் இருக்கிறது.

பதில்(அரவிந்த்): start up culture என்று சொல்வார்கள். உதாரணமாக நீங்கள் I.T துறையில் வேலைசெய்கிறீர்கள் என்றால், உடனே உங்களிடம் என்ன கேட்பார்கள் என்றால் TCSஆ, INFOSYSஆ, WIBROஆ இப்படிக் கேட்டுதான் பழக்கம் இருக்கிறது. அதைத்தாண்டி மக்களுக்கு பெரிய விழிப்புணர்வு இருக்கிறதில்லை. நீங்கள் வேறு ஏதாவது ஒரு நிறுவனத்தின் பெயரை சொன்னீர்கள் என்றால் அப்படியா சின்ன நிறுவனமா என்று கேட்பார்கள். எப்பொழுதுதான் நாம் உருவாக்குவோர்களாகுவோம், நாம் யாரும் உருவாக்குவதே இல்லை. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தாமல் இருப்பது. non free software, proprietary software சொல்வோம் இல்லையா இதை பயன்படுத்துவது முக்கியமான காரணம். அது ஏனென்றால், அது எப்படி வேலை செய்கிறது என்று தெரியவில்லை என்றால் அதை வைத்து எப்படி எதையாவது உருவாக்க முடியும். ரேடியோவை உடைத்துப் பார்த்துத்தான் ரேடியோவை மேம்படுத்தியிகிறார்கள். குழந்தைகளைப் பார்த்தீர்கள் என்றால் எதையாவது எடுத்து உடைப்பார்கள், ஆட்டிப் பார்ப்பார்கள். குழந்தைகள் எதையாவது எடுத்து போடும் சத்தம் வரும், பலமாக போட்டால் இன்னும் சத்தம் வருமா என்று பார்க்கும். இது குழந்தையின் இயல்பு. குழந்தை விஞ்ஞானி மாதிரி. அந்த குழந்தை அப்படி யோசிக்கிறது. அதை யோசிக்க விடாமல் செய்வதுதான் மனிதர்களுக்கு இயல்பாக இருக்கும், மனிதன் என்றால் அப்படித்தான் இருப்பான். இயல்பு இல்லாமல் மனிதன் கிடையாது. அந்த இயல்பையே தடுப்பதற்குத்தான், அதை உடைத்து எரிந்தால்தான் சின்ன சின்ன நிறுவனத்தை நாமே புதிதாக உருவாக்கலாம். நாமே புதிதாக ஒரு சிறிய நிறுவனத்தை உருவாக்க முடியும்.

fsftn14கட்டற்ற மென்பொருள் இருந்தால் மட்டும்தான் நம்மால் புதுபுது விடயங்களில், பெரிய செலவும் இல்லாமல் புது புது விடயங்களை நம்மால் செய்ய முடியும். நான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறேன். எங்களது நிறுவனமும் முழுவதுமாக கட்டற்ற மென்பொருளை நம்பித்தான் இருக்கிறது. உலகத்தில் இருக்கிற 100 சதவிகித நிறுவனமுமே கட்டற்ற மென்பொருள் இல்லை என்றால் பயன்படுத்தவே முடியாது. அதுதான் உண்மை. அதனை அவர்கள் நிராகரிக்கலாம். Microsoft கூட azure என்ற service வைத்திருந்தார்கள். அதிலேயும் GNU / LINUX இயங்கு தளத்தை ஒரு சேவையாகத் தருகிறார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம் என்னதான் தலைகீழாக நின்றாலும் கட்டற்ற மென்பொருள் இல்லை என்றால் அவனால் லாபம் சம்பாதிக்க முடியாது என்பதுதான் உண்மை. கட்டற்ற மென்பொருள் இல்லாத இடம் கிடையாது.

இணையம் பயன்படுத்துபவர்களுக்கு முக்கியமாக அரசாங்கம் கொடுக்கும் மடிக்கணினியில் Boss linux என்பதைப் பார்க்காமல் இருக்கிறார்கள் நிறையபேர். அதை திறந்தே பார்த்திருக்கமாட்டார்கள். அதை நிறுத்த வேண்டும். அவர்கள் பயன்படுத்தினால் மட்டும்தான் நிறைய வாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைக்கும். அவர்கள் பின்னாளில் நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும், ஏதாவது செய்யவேண்டும் அதாவது start-ups என்று சொல்வார்கள், சிறிய சிறிய நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்றால் Boss linux-ஐ பயன்படுத்தினால்தான் முடியும். தங்களை வின்டோஸ்க்குள் அடைத்து வைத்துக்கொள்ளாமல், சிறையில் அடைத்துவைத்துக் கொள்ளாமல் உடைத்து எறிந்து வெளியில் வந்து GNU / LINUX-யை பயன்படுத்தவில்லை என்றால் எதையும் செய்ய முடியாது. GNU என்றால் GNU’s Not Unixஎன்று அர்த்தம். இதை Richard Stallman 1980 களில் கொண்டுவந்தார். இது ஒரு மென்பொருட்களின் தொகுப்பு. 10, 20 software சேர்ந்ததுதான் இந்த GNU தொகுப்பு. GNU தொகுப்பும் LINUX என்கிற kernel என்று சொல்வார்கள், இந்த இரண்டும் சேர்ந்தால்தான் ஒரு இயங்கு தளம்வரும். இன்றைக்கு ubuntu கேள்விப்பட்டிருப்பீர்கள் மிக பிரபலமானது, fedora மிக பிரபலமானது. இவையெல்லாமே GNU / LINUX. இதைத்தான் நாங்கள் பயன்படுத்தச் சொல்கிறோம். Boss நம் எல்லோருக்குமே தெரியும், இந்திய அரசாங்கமே செய்துவருகிறது.

fsftn7நெட்நியூட்ராலிட்டியில் ஒரு முக்கியமான பிரச்சனை என்று நாம் பார்த்தோம் என்றால் விலை. காரணியைத் தாண்டி facebook க்கு மட்டும் கூடுதலாக ஐம்பதுரூபாய் கொடுக்கிறீர்கள். இணையம் என்பதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், அவர்கள் நினைப்பது மாதிரி பயன்படுத்தலாம் இதுதான் இணையம். இந்திய அரசாங்கம் மட்டுமல்ல, உலகத்திலுள்ள எல்லா அரசாங்கமும் முக்கியமாக, அமெரிக்க அரசாங்கம் உடைத்து எறிந்துவிட்டார்கள். மக்கள் கொந்தளித்து எழுந்ததால் உடைத்து எறிந்துவிட்டார்கள். இங்கு இருக்கிற மக்களும் கொந்தளித்து எழ வேண்டும். இது முக்கியமான பிரச்சனை. ஏனென்றால் நாளைக்கு அவன் சொல்லுவான் இணையத்தில் நீ பிளாக்கை மட்டும்தான் படிக்கவேண்டும் என்று அவன் சொல்லலாம். நீ டிவிட்டரில் மோடிக்கு எதிராகவோ அல்லது ஜெயலலிதாவுக்கு எதிராகவோ அல்லது காங்கிரசுக்கு எதிராகவோ என்று யாருக்கு எதிராகவோ நான் ஏதாவது எழுதினேன் என்றால் உன்னைத் தூக்கி நான் உள்ளே போட்டுவிடுவேன். அல்லது உன் பிளாக்கில் எழுதினால் பிளாக்கையே முடக்கிவிடுவேன் என்று அவர்களால் செய்ய முடியும். அதை செய்தார்கள் என்றால் நம்முடைய பேச்சுரிமை போய்விடும். அது இல்லை என்றால் மிகக் கடினம். சமீப காலங்களில் துனுசியா, எகிப்தில் நடந்த விசயங்கள் எல்லாம் நமக்குத் தெரியும். இணையம் மூலமாகத்தான் இது அவ்வளவு பெரிதாக வெளியில் வந்தது. அது இல்லை என்றால் ஒன்றுமே செய்ய முடியாது.

tar என்ற ஒரு மென்பொருள் இருக்கிறது. உங்களை அடையாளமற்றவராக வைத்துக்கொள்வதற்கு பயன்படுத்துகிற ஒரு மென்பொருள். அதாவது நீங்கள் யார் என்ற அடையாளத்தை காட்ட வேண்டியதில்லை. இந்த ஒரு மென்பொருள் இருந்ததால்தான் எகிப்தில் புரட்சி நடந்தது என்று அடித்து சொல்லலாம். வெளியிலிருந்து யாராவது செய்தி அனுப்பினால் நம் அரசாங்கம் யார் என்று கண்டுபிடிப்பது போல, அவர்களுடைய அரசாங்கமும் கண்டுபிடிக்கும். எப்படி வலைப்பதிவை எல்லாம் எழுதினார்கள், எப்படி தைரியமாக செய்தார்கள் என்றால் tar-க்கு பின்னால் இருந்து கொண்டு செய்வார்கள். Tar நீங்கள் யாரென்று காட்டாது, என்னை வேறு யாராகவோ காட்டும். அதனால்தான் முடிந்தது. இங்கே நீங்கள் சின்ன அளவில் எதிர்ப்பை காட்டவேண்டும் என்றாலும் அது முக்கியமான ஒரு பங்களிப்பாக இருக்கவேண்டும். மிக முக்கியம் நெட்நியூட்ராலிட்டி. நெட்நியூட்ராலிட்டி இல்லையென்றால் சிறிய நிறுவனம் ஆரம்பிக்க முடியாது, எதையுமே செய்ய முடியாது, மிகவும் அத்தியாவசியம். இணையம் பயன்படுத்துபவர்கள் இதை சின்ன விசயமாக எடுத்துக்கொள்ளாமல் ஏதோ ஐம்பது ரூபாய் கூடுதலாக கேட்கிறார்கள் என்ற பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாமல் அடிப்படை பேச்சுரிமை, அடிப்படை வாழ்வுரிமைக்கான பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு இணையம் இல்லை என்றால் வாழமுடியாது என்ற நிலைமை வந்துவிடும். ஒரு சில நாடுகளில் அரசியலமைப்பு உரிமை இருக்கிறது. ஒரு நாட்டில் Internet is a constitutional right என்று சொல்லியிருக்கிறார்கள். அது உண்மைதான். ஐ.நாவில் கூட தீர்மானம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்திய அரசாங்கமும் தீர்மானம் எடுத்திருக்கிறது. இந்த மாதிரி கட்டங்களில் பார்க்கும் பொழுது எவ்வளவு முக்கியம் என்று நமக்குப் புரிகிறது. அதனால் நெட்நியூட்ராலிட்டிக்கு ஆதரவாக மக்கள் இருக்க வேண்டும்.

கேள்வி: digital divide க்கு கட்டற்ற மென்பொருள் என்ன செய்யமுடியும்?

பதில்(அரவிந்த்): நீங்கள் கணினியில் வன்பொருள் பார்த்தீர்கள் என்று வைத்தால் இலவசமாக ஒரு வருட சந்தாவுடன்உடன் antivirus தருகிறார்கள். அதன் பிறகு அதை போடவேண்டும் என்றால் அதில் ஐந்தாயிரம் ஆறாயிரம் என்று கொடுப்பார்கள். சிலர் மாணவர் பதிப்பு (students subscription) தருகிறார்கள். அது முடிந்து போய்விட்டது என்றால் மீண்டும் வாங்க வேண்டும். இப்பொழுது 12ஆவது படிக்கிற மாணவர்களுக்குத் தருகிறார்கள், கல்லூரி படிப்பவர்களுக்குத் தருகிறார்கள். கல்லூரி முடிந்துவிட்டது என்றால் அவர்கள் மாணவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே அந்த Microsoft-ஐ மாணவர்கள் பயன்படுத்த முடியாது, வேறு போடவேண்டும். ஒழுங்காகப் போடவேண்டும் என்றால் ஐம்பதாயிரம் வேண்டும். அதற்கு ஒரு மடிக்கணினியே வாங்கிக்கொள்ளலாம். கிடைக்கவிடாமல் divide பண்ணுவதற்குப் பெயர்தான், பிரித்தாள்வதற்குப் பெயர்தான் digital divide.

fsftn12digital divide ல் முக்கியமான பிரச்சனை இந்திய அரசாங்கம் ஏகப்பட்ட சேவையை இணையத்தில் தருகிறது. அந்த இணையத்தில் இந்த சேவை இருக்கிறதா என்று மூக்கில் கை வைக்கிற அளவிற்கு அத்தனை விடயங்களையும் செய்துகொண்டிருக்கிறது. india.co.in என்று போட்டீர்கள் என்றால் உலகத்தரம் வாய்ந்த இணையதளம். இப்படி ஒரு அரசாங்க இணையதளமா என்ற அளவிற்கு செய்து வைத்திருப்பார்கள். ஆனால் பயன்படுத்தும் மக்களின் தொகை மிகக்குறைவாக இருப்பார்கள். சாமானிய மக்களுக்கு இப்படியெல்லாம் அரசாங்கம் செய்கிறதா என்ற கேள்வி எழும். இந்த நிலைமை வந்ததற்கான முக்கியமான காரணம் அரசாங்கம்தான். கணினி சார்ந்து பயன்படுத்துகிற இணையத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே கிடையாது. அதை தனியார் நிறுவனங்களின் கைகளில் கொடுத்துவிடுவதால், அவர்கள் எங்கு லாபகரமாக இருக்குமோ அங்கு கொண்டுபோய்தான் சேர்ப்பார்கள். கட்டற்ற மென்பொருள் இதற்கு என்னசெய்யமுடியும் என்றால் mesh network வழியாகத்தான் செய்வார்கள். digital divideஐ mesh network வழியாக உடைக்கவேண்டும். mesh network என்பது மக்கள் தாங்களாகவே networks-ஐ உருவாக்கிக்கொள்வது. mesh networks எல்லாம் உருவாக்கி அவர்களுக்கே இணையத்தை உருவாக்கிக்கொண்டு அவர்களுக்குள்ளே இணையங்களை பயன்படுத்திக்கொள்வார்கள். அவர்களுக்கு என்ன விலையில் வேண்டுமோ அந்த விலையிலே அவர்களால் செய்துகொள்ள முடியும். ஒரு community kitchen மாதிரி, community network என்று சொல்லுவோம்.

கேள்வி: கட்டற்ற மென்பொருளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு செய்யவேண்டிய பணிகள் என்ன?

பதில்(பிரகாஷ்): முக்கியமான விடயம் முதலில் Boss linux ஐ தமிழில் போடலாம். Boss linux என்று ஒன்று இருக்கிறது, இதை அரசாங்கம் உருவாக்கியிருக்கிறார்கள். இது கட்டற்ற மென்பொருள்.அதாவது linux என்று ஒன்று இருக்கிறது, அந்த linux ஐ பயன்படுத்தி வேறொரு மென்பொருளை உருவாக்குவார்கள். அப்படி உருவானதுதான் debian என்கிற இயங்குதளம். அந்த இயங்குதளத்தைமாற்றி அமைத்துத்தான் இந்த Boss linux வந்தது. இந்த debian பார்த்தீர்கள் என்றால் அதுவும் ஒரு மிகச்சிறந்த மென்பொருள் என்று சொல்லலாம். அதை மாற்றி அமைத்துத்தான் இந்த Boss linux வந்திருக்கிறது. அரசாங்கம் அதில் நேரடியாக வந்து சேர்ந்துவிடவில்லை. இன்னொன்று பார்த்தீர்கள் என்றால் debian உடைய மேம்பாடுகள் எல்லாமே Boss linux க்கு நேரடியாகக் கிடைக்கும். அதனால் அந்த linux என்பது தனிமைப்பட்டது கிடையாது, அதுவும் உலகத்தோடு இணைந்த ஒரு விடயம்தான். அரசாங்கம் என்ன செய்கிறார்கள் என்றால் அது மேலே கட்டப்படக்கூடிய விசயத்தை தடுத்து விடுகிறார்கள். அந்த நிரல்களை மடக்கிவிடுகிறார்கள், மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் செய்துவிடுகிறார்கள். உதாரணமாகப் பார்த்தீர்கள் என்றால் அதில் தமிழ் தட்டச்சு ஒன்று வைத்திருக்கிறார்கள், திருக்குறள் என்ற மென்பொருள் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அந்த மென்பொருட்கள் என்னவென்றால் அரசாங்கம் கொடுத்த அந்த மடிக்கணினியில் மட்டும்தான் இருக்கும், வேறு எங்கும் இருக்காது. linux ஐ பயன்படுத்துகிற வேறு யாருக்கும் கிடைக்காது. இதை பரவலாக்கவேண்டும்.

இதன் மேல் செய்த வேலைகளை உதாரணமாக இவர்கள் மடிக்கணினி கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். மடிக்கணினியில் மென்பொருளை install பண்ணும் பொழுது ஏதாவது சிக்கல்கள் இருந்திருக்கலாம், அதைத் தீர்த்துக்கொள்வதற்கு சில codeசெய்திருக்கலாம். அந்த code-ஐ நேரடியாக எடுத்த debian ல் திருப்பிக் கொடுத்தால் அந்த இணையத்தில் உள்ள debian பயன்படுத்துகிற எல்லோருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும். இந்தியர்களுக்கு customize பண்ணும் பொழுது என்ன சிக்கல்கள் வந்தது என்பதை ஆவணப்படுத்தி வெளியில் கொண்டு வரலாம். இன்னும் என்னென்ன usage statistics அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்ற customize வெளியில் கொண்டுவரலாம். அது முக்கியமாக செய்யவேண்டிய ஒரு விடயம். அதை அவர்கள் செய்வதில்லை. இரண்டாவது அந்த Boss linux ஐ மாணவர்களுக்கு மடிக்கணினியில் போட்டுக்கொடுத்துவிட்டு அது இருக்கிறதையே சொல்லவே மாட்டார்கள். அதனால் அப்படி ஒன்று இருக்கிறது என்பதே நிறையபேருக்குத் தெரியாது. மற்றொன்று என்னவென்றால் அரசாங்க அலுவலகத்திற்குக் கொண்டுபோகவே இல்லை, அது ஒரு முக்கியமான ஒரு விடயம். அரசாங்க அலுவலகங்களிலும் இதை பயன்படுத்தவேண்டும் என்று சொல்லவேண்டும். மற்றொன்று எந்த வேலைகளை அரசாங்கம் செய்தாலுமே, தமிழ் சார்ந்து செய்தாலுமேகூட அது கட்டற்ற மென்பொருளாக, எல்லோருக்கும் கிடைக்கும் விதமாகக் கொடுப்பது கிடையாது. உதாரணமாக நான் சொன்னது மாதிரி koha என்கிற மென்பொருள் கன்னிமாராவில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 34 தலைமை நூலகங்கள் எல்லாவற்றிலுமே koha-வை வைத்துத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அது ஒரு கட்டற்ற மென்பொருள். இதை இவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அது ஒரு சாதாரண முயற்சி கிடையாது.

tamil menporul8மொழிபெயர்ப்புக்கு வெளியில் எவ்வளவு என்றால் ஒரு வார்த்தைக்கு ஒரு ரூபாய் என்பதுதான் கட்டணம். இந்த koha என்கிற மென்பொருளில் 4 லட்சம் வார்த்தைகள் இருக்கிறது. இந்த 4 லட்சம் வார்த்தைகளையும் அரசாங்கம் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகம் KBC-யில் வைத்து மொழிபெயர்த்திருக்கிறார்கள். அந்த மொழிபெயர்த்த பதிப்பைத்தான் கன்னிமாராவில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த மொழிபெயர்ப்பை இவர்கள் வெளியில் தரமாட்டார்கள். நான் நூலகத்தின் மென்பொருளை செய்யவேண்டுமானால் 4 லட்சம் வார்த்தைகளை 4 லட்சம் ரூபாய் கொடுத்து மொழிபெயர்க்கவேண்டும். இதுதான் இன்றைய நிலைமை. ஆனால் அரசு பணத்தில், மக்கள் வரிப்பணத்தில் செய்த இந்த கட்டற்ற மென்பொருளைக் கொடுத்திருந்தார்கள் என்றால் இலவச உரிமமாகக் கொடுத்திருந்தார்கள் என்றால் இந்தப் பிரச்சனையே வராது. இது ஒரு மென்பொருளைப் பற்றியான ஒரு விடயம். இதே மாதிரி பல்வேறான இடங்களிலேயும் இதே மாதிரியான வேலைகள் நடக்கிறது. என்னவென்றால் அரசுக்கு கொள்கை புரிதல் என்பது கிடையாது. அது பெரிய சிக்கல். மடிக்கணினி பிரச்சனையில் பார்த்தீர்கள் என்றால் முன்பு இருந்த வின்டோஸ் மட்டும்தான் பயன்படுத்தப்போகிறோம் என்று சொல்லிவிட்டார்கள். நாங்கள் IT Secretary-யைப் பார்க்கும் பொழுது அவர் எனக்கு கொள்கைகள் எல்லாம் விசயமே கிடையாது. அம்மா மடிக்கணினி தருகிறார்கள், நல்ல மடிக்கணினி தரவில்லை என்று மக்கள் சொல்லிவிடுவார்கள், நான் கொடுக்கவேண்டும் என்று சொல்கிறார். அந்த நோக்கங்கள் எல்லாம் இப்போதைக்கு செய்யவேண்டும் என்கிற விடயம்தான் இருக்கிறதே தவிர தொலைநோக்கு இல்லை.

இன்றைக்கு Boss linux செய்திருக்கிறேன் என்பதைத் தவிர நாளைக்கு Boss linux ன் அடுத்த கட்டம், அதாவது உதாரணமாக 5 verson தான் Boss linux ல் வந்திருக்கிறது, ஆனால் debian வந்து எங்கேயோ போய்விட்டது. அந்த update இங்கே கொண்டு வரவேண்டும் என்றால் அரசாங்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் Boss linuxல் வேலைபார்த்த யாரோ ஒருவர் ஓய்வுபெற்று வெளியே சென்றிருக்கலாம். இந்தக் கட்டத்தில் அது செயல்படாமல் இருக்கும். கட்டற்ற மென்பொருளை அவர்கள் கொடுத்திருந்தார்கள் என்றால் அதை migrate செய்து கொடுப்பதை நாங்களே கூட செய்துவிடலாம். நானும், இன்னொருவரும் உட்கார்ந்தால் இன்று இரவு முடித்து காலையில்கூட கொடுத்துவிடலாம். ஆனால் அந்த மாற்றங்களை அவர்கள் வெளியிட மாட்டார்கள். debian க்கும் Boss linuxக்குமான சில வித்தியாசங்களை இவர்கள் செய்திருக்கிறார்கள் பார்த்தீர்களா அதை வெளியில் கொண்டுவரவேண்டும், அதைக் கொடுப்பதில்லை. இரண்டாவது lexicon தயார் செய்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள், dictionary தயார் செய்திருக்கிறேன் என்று சொல்கிறார்கள். அதெல்லாம் pdf ஆக கொடுத்துவிடுவார்கள். நீங்கள் உட்கார்ந்து அ, ஆ என்று வரிசைப்படி தேடிக்கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது ஒரு mobile app பண்ணுகிறேன் என்றால் அந்த library-யை நான் பயன்படுத்த முடியாது, யாராவது உட்கார்ந்து தட்டச்சு செய்து ஏற்றவேண்டும். அவர்கள் செய்வதை தொலைநோக்கு இல்லாமல் செய்துகொண்டே இருக்கிறார்கள். data–வை இலவசமாகக் கொடுப்பது கிடையாது. நாட்டுடைமை ஆக்கப்பட்டது என்கிறார்கள், அது பொதுஉரிமம் அவ்வளவுதான்.

நீங்கள் எடுத்து பயன்படுத்தினால் யாராவது ஒருவர் கேள்வி கேட்டால் ஒன்றும் சொல்ல முடியாது, திரும்பவும் நீதிமன்றத்திற்குச் சென்று நிரூபித்துக் கொண்டுவரவேண்டும். படைப்பாக்கப் பொதுமை என்று சொல்வார்கள். மக்களால் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது என்பதுதான் படைப்பாக்கப் பொதுமை என்பது. யார் உருவாக்கினார்கள் என்பதையும் நான் சொல்ல வேண்டும், உதாரணமாக ஒரு மென்பொருளை நீங்கள் 2007 வரையிலும் உருவாக்கியிருக்கிறீர்கள் என்றால், அதன் பிறகு நான் உருவாக்கினேன் என்றால், 2007 வரை இவர் உருவாக்கினார் என்று இவர் பெயரை சேர்த்துவிட்டு, 2007-09 என்று என் பெயரை சேர்த்துவிட வேண்டும். ஆவணங்களில் creative commons data -க்கு creative commonsபடைப்பாக்க பொதுமை இந்த உரிமத்தில் கொடுப்பதை பற்றி யோசிக்கலாம். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் இலவச மடிக்கணினியில் install செய்து கொடுத்திருப்பார்கள், அதை வைத்து நான் என்ன செய்யமுடியும், ஒன்றுமே செய்யமுடியாது. நாளைக்கு debian க்கு update செய்தால் அந்த மென்பொருள் எல்லாமே போய்விடும். திரும்பி கொண்டுவரமுடியுமா என்றால் கொண்டுவர முடியாது. இந்த மாதிரியான சிக்கல்கள் இருக்கிறது. என்னவென்றால் கொள்கைத் தெளிவு இல்லை என்று சொல்லலாம். தமிழ்நாடு இணைய கல்விக்கழகம் (Tamilnadu Virtual Academy)என்ன செய்தார்கள் என்றால் மென்பொருள் சம்பந்தப்பட்ட தமிழ் சார்ந்து வேலை செய்கிற எல்லாரையும் அழைத்து நிகழ்வு நடத்தி அதிலிருந்து சில கூட்டு முடிவுகள் எடுத்தார்கள். அந்த மாதிரியான நிகழ்ச்சிகள் தமிழ் உலகத்திற்கு மிகப் புதுமையானது. அந்த மாதிரியான முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இப்பொழுது எப்படியென்றால் செயலாளர் எழுதிக்கொடுப்பார், அமைச்சர் சென்று வாசித்துவிட்டு வந்துவிடுவார், அவ்வளவுதான். அதில் என்ன குறைவு, என்ன நிறைவு என்று யாருக்குமே தெரியாது. இரண்டாவது செயலுக்கு வரப்போவது கிடையாது. அதனால் மக்களும் கண்டுகொள்வது கிடையாது. செயல்படுபவர்களையாவது அழைத்து கூட்டு முடிவு எடுப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். அதெல்லாம்தான் அரசு செய்ய வேண்டியது. மற்றொன்று என்னவென்றால் எல்லாவற்றையுமே பூட்டி வைத்துக்கொள்வது நடக்கிறது. அரசாங்கம் ஒரு முடிவை இறுக்கத்துடன் எடுக்கிறார்கள். இந்திய அரசாங்கமாக இருக்கலாம், தமிழ்நாடு அரசாங்கமாக இருக்கலாம், அதாவது எனக்கு ஆவணம் வேண்டும் என்று சொல்லலாமே தவிர, எனக்கு Microsoft ஆவணம் வேண்டும் என்று சொல்ல கூடாது. ஆனால் அரசு தொடர்ச்சியாக அந்த வேலைகளை செய்துகொண்டிருக்கிறது. அதனால் அதை நிறுத்த வேண்டும். எனக்கு முடிவாக ஒரு ஆவணம் தேவை, அவ்வளவுதான் தேவையே தவிர எனக்கு ஆவணம் தேவை, இது தேவை, அது தேவை என்று சொல்லக்கூடாது. இப்பொழுது அந்த விவரத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது டென்டர் விடும்பொழுதே பார்த்தீர்கள் என்றால் எனக்கு Microsoft Office வேண்டும் என்று சொல்லி டென்டர் விடுவார்கள். இதை யார் கொடுக்க முடியும், Microsoft மட்டும்தான் கொடுக்கமுடியும், அதற்கு எதற்கு டென்டர். நியாயமாக யோசித்துப் பாருங்கள்.

fsftn1334Windows கணினி வேண்டும் என்றால் Windowsகாரன்தான் கொடுக்க முடியும் அதற்கு எதற்கு டென்டர். உங்களுக்குத் தேவை கணினி. உங்களது கணினியில் எல்லோரும் மின்சாரக் கட்டணம் போடப்போகிறார்கள், அது தேவை என்றுதான் கொடுக்கவேண்டுமே தவிர, மின்சார கட்டணம் போடுவதற்கு எனக்கு கணினி தேவை என்று நியாயமானது, யார் வேண்டுமானாலும் quotation கொடுக்கலாம். எனக்கு மின்சார கட்டணம் போட Windows கணினி தான் வேண்டும் என்றால் அதை யார் டென்டர் எடுக்க முடியும். அதுதான் பூட்டி வைக்கப்படும் விடயம். அதிலிருந்து அரசு வெளியில் வரவேண்டும். ஏனென்றால் முன்பு இருந்த Windows கணினியில்தான் bill போட முடியும் என்ற நிலைமையெல்லாம் இப்போது கிடையாது. அதையெல்லாம் மாற்றி வெளியில் வரவேண்டும். இன்று நிறையவிசயங்கள் கட்டற்றதாக வந்து நிற்கிறது. எனவே இன்றைக்கே முடிந்தாலும் கூட அது மிகப்பெரிய சிக்கலாகப் போய் முடியும்.

உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டீர்கள் என்றால் AK47 என்ற துப்பாக்கி எப்பொழுது கண்டுபிடித்தது என்று பார்த்தீர்கள் என்றால் சோவியத் யூனியன் காலத்தில் கண்டுபிடித்தது. அப்பொழுது காப்புரிமை எல்லாம் போட்டு வைத்துக்கொள்ள மாட்டார்கள் சோவியத்தில். இந்த துப்பாக்கியின் எப்படி செய்வது என்ற வரைபடம் எல்லாமே திறந்த உரிமமாக (open license) இருக்கும். எனவே யார் வேண்டுமானாலும் எடுத்து செய்துகொள்ளலாம். AK47 என்பது தனி ஒரு நிறுவனத்தினால் செய்யப்படுவது கிடையாது. யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். paracetamol யார் வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம், பல நிறுவனங்கள் கொடுப்பார்கள். இந்த மாதிரி அறிவை பொதுமையாக்குதல் வேண்டும். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சோவியத் உடைந்து 25 வருடம் ஆயிற்று. AK47 க்குப் பிறகு நிறைய கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் என்னவென்றால் இரண்டொரு நாளில் பூட்டி விடுவார்கள். அது எல்லோருக்கும் கிடைக்காது. அழிக்கிற பொருளாக இருந்தாலுமே பொதுமையில் கொடுத்தால் மட்டுமே அது நீண்ட காலம் வரும். AK47 க்குப் பிறகு வேறு யாராவது ஒரு துப்பாக்கியை இந்த மாதிரி கொடுத்திருந்தார்கள் என்றால் அது பெரிதாக வந்திருக்கலாம். ஏன் அறிவு கட்டற்றதாக இருக்கவேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

பதில்(அரவிந்த்): அரசு கணினி கொடுக்கும் பொழுது Microsoft Windows போட்டுத்தான் கொடுக்கிறார்கள். இப்பொழுது புதிதாக ஒரு Windows வந்திருக்கிறது, Microsoft Windows10 என்று வந்திருக்கிறது. அதில் ஏகப்பட்ட பாதுகாப்பு பிரச்சனை(security problem) இருக்கிறது. 7லேயும், xp-லேயும் அதே மேம்படுத்தலைக் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் என்ன தட்டச்சு செய்தாலும் அது server ல் சென்று உட்கார்ந்து கொள்ளுமாம். நான் அரவிந்த் என்று என் பெயரை தட்டச்சு செய்தால் போய் உட்கார்ந்து கொள்ளுமாம். நாளைக்கு கடவுச்சீட்டு எண், ATM எண்என்று நீங்கள் தட்டச்சு செய்தாலும் அதையெல்லாம் server-ல் சேகரித்து வைத்துக் கொள்ளுமாம். அதுபோக ஏகப்பட்ட தனியுரிமை பிரச்சைகள் (privacy issues)இருக்கிறது. நீங்கள் என்னவெல்லாம் தரவுகள் (datas) வைத்திருக்கிறீர்கள் என்பதை Microsoft-காரன் படிக்கிறான். உங்களுடைய தேடல் தரவை (search data) அவன் படிக்கிறான். இது பெரிய பிரச்சனை. அரசு இந்த மாதிரி திருட்டு நடக்கிற ஒரு மென்பொருளை, அரசே பண்ணுவது மிகவும் பெரிய மோசடியாகப் போய் முடியும். மாணவர்களுடைய தனியுரிமையை உடைத்து எறிகிற ஒரு விசயமாக இருக்கும். கண்டிப்பாக அரசு இதை செய்யக்கூடாது. கட்டற்ற மென்பொருள்தான் அதில் செய்துதர வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் செய்கிற எல்லாமே கட்டற்றதாகத்தான் இருக்க வேண்டும். அதுதான் மக்களுக்கு அவர்கள் செய்வது நியாயமாக இருக்கும். ஆவணம் கட்டற்றதாகவும் கொடுக்க வேண்டும், மென்பொருள் செய்தார்கள் என்றால் அதுவும் கட்டற்றதாகக் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கிற மடிக்கணினியிலும் கட்டற்ற மென்பொருளாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் அது மக்களுக்கு எதிரானதாகப் போய் முடிந்துவிடும். மக்களுக்கு விழிப்புணர்ச்சி அதிகரிக்க வேண்டும்.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் உறுப்பினர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது