நவம்பர் 27, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு: பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறதுMay 11, 2017

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும். அவ்வகையில் இந்த வருடத்திற்கான பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை(12.05.17) வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

Siragu plus 2 result

இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9.3லட்சம் மாணவ மாணவிகளின் தேர்வு முடிவுகளை நாளை(12.05.17) காலை 10 மணியிலிருந்து அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை(12.05.17) காலை 10 மணியிலிருந்தே இணையத்தளம் மூலமாகவோ அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாகவோ தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தேர்வு எண், பெயர், பிறந்த தேதி போன்ற தகவல்களை அனுப்பி எஸ்.எம்.எஸ். மூலமாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இதற்கான மறுகூட்டலுக்கு மே 15ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு: பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது”

அதிகம் படித்தது