தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
May 19, 2017
தமிழகத்தில் மார்ச் மாதத்திலிருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் இல்லாத அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக பதிவாகியுள்ளது.
வெப்பச்சலனம் காணரமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. தமிழகத்தின் பல இடங்களில் நூறு டிகிரிக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்த்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர்.
சென்னையில் கடந்த மூன்று நாட்களாக அனல் காற்று வீசி வருகிறது. அதன்படி இன்று காலை நூறு டிகிரிக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை(114 டிகிரி) திருவள்ளூரில் பதிவாகியுள்ளது.
வெயிலின் கொடுமையினால் நெல்லை மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த ஆவரைகுளத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் மயங்கி விழுந்து பலியாகியுள்ளார். இந்நிலையில் வட தமிழகத்தில் நாளையும் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு”