மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்ப் பாவை வாழி!(கவிதை)

இல. பிரகாசம்

May 6, 2017

tamil-mozhi-fi

 

ஆரெழில் காவிரி வளநாடுடைத் தென்னாடு

மாச்சிறப்பினை கொண்ட வளநாடு தென்னாடு

பண்ணெடும் வரலாறாம் அவள்கொண்ட பண்பாடு

பல்இன மாந்தரைப் பெற்றவளாம் புகழ்செழுந்

தமிழ்மொழிப் பால்கொடுத்து வளர்த்த வளாம்அவள்

திருமேனி போல்வைகை பொருணை பாலாறு

தங்கத் தோழியுடனே தாயாய் நின்றுஎம்மை

தாலாட்டிச் சீராட்டிப் பாராட்டிப் பெற்றவளாம்

உயிர்தமிழ் மொழியாய் பிறந்திட்ட பாவையவள்!

உயிர்மொழி யாகிமெய் எழுத்தாகி எம்மைக்

கண்ணெழுத் துடையவ ராக்கியவள் செவ்வைக்

கோவைமொழி யுடையாள் அவள்புகழ் வாழி!

 

ஆரெழில் நனிச்சிறந்த மாந்தரைப் பெற்றவளாம்

அன்பெனும் ஆய்தந்தனைக் கொண்டு காத்தவளாம்

தமிழெனும் தாயாகிக் களித்தெழுங்கு கொஞ்சும்

மலையாளம் கவின்கண்ணடம் துள்ளல்துளு

மொழிக்கவிக் குழந்தைகளைப் பெற்றத் தாயவளாம்

மொழியாலும் உயிராய் நின்றுநிலை பெற்றவளாம்

உயிர்மெய் எழுத்துக்கள் போலே வளம்பெற்ற

உயர்சிந்தனை உடைய மொழிநடை யுடைவளாம்

உலகம் யாவும் தலைத்தோங்கிட சொற்பதங்களை

ஆக்கிநமக்(கு) அளித்திடும் வண்மை யுடையவளாம்

நீதிநெறி வழுவாது நின்று(உ)லகோர் வாழ்ந்திட

நீநிலத்தில் பிறந்திட்ட தமிழ்மொழி வாழி!


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்ப் பாவை வாழி!(கவிதை)”

அதிகம் படித்தது