கணினி தொழில்நுட்பம் குறித்த சில இணையதளங்கள்
சௌமியன் தர்மலிங்கம்May 23, 2015
கணினி மற்றும் தொழில்நுட்பம் பற்றிய தகவல்கள் அதிகமாக ஆங்கில இணைய தளங்களில் மட்டுமே முன்பு காணமுடிந்தது. ஆனால் தற்பொழுது தமிழில் தொழில்நுட்ப இணையதளங்கள் நிறைய நடத்தப்பட்டு வருகிறன. அவற்றில் சிலவற்றைக் காணலாம்.
கணினி தமிழன்:
இந்த இணையதளத்தில் கணினி சம்பந்தப்பட்ட கட்டுரைகள் மற்றும் கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் ஆகிய மென் பொருள்களைப் பற்றிய சந்தேகங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள் ஆகியவை பதியப்பட்டுள்ளது. மேலும் இந்த தளத்தில் கணினி பற்றிய காணொளிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது.
இதனைக் காண http://kaninitamilan.in/ என்ற சுட்டியை சொடுக்கவும்.
தொழில்நுட்பம்:
இந்த இணையதளத்தில் இலவச மென்பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலும் கணினி தொடர்பான பல தகவல்கள் மற்றும் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மென்பொருள்கள் மற்றும் வன்பொருள்களை கையாள்வது பற்றியான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனைக் காண http://www.tholilnutpam.com/ என்ற சுட்டியை சொடுக்கவும்.
Techதமிழ்:
இந்த இணையதளத்தில் சில கணினி மென்பொருள்களைக் கற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் அடங்கிய கட்டுரைகள், பல அறிய தகவல்கள், கணினி சம்பந்தமான பாடங்கள் இதில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இதனைக் காண http://www.techtamil.com/ என்ற சுட்டியை சொடுக்கவும்.
தmil COMPUTER:
இந்த இணையதளத்தில் கணினி தொடர்பான கட்டுரைகள், குறிப்புகள் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டோஷாப் என்ற மென்பொருளைக் கற்றுக்கொள்வதற்கான கட்டுரைகளை இதிலிருந்து தரவிறக்கம் செய்து கற்றுக்கொள்ளலாம்.
இதனைக் காண http://www.computertamil.eu/index.php/photosho.html என்ற சுட்டியை சொடுக்கவும்.
சௌமியன் தர்மலிங்கம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கணினி தொழில்நுட்பம் குறித்த சில இணையதளங்கள்”