மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ் நாட்டில் ஆங்கில வழிக் கல்வி முறை தேவையா?

ஆச்சாரி

Oct 15, 2013

பொதுவாக எல்லா நாடுகளும் தங்களுடைய தாய் மொழியிலேயே கல்வி தருகின்றன.  அதனால் வளர்ந்து நிற்கின்றன.  ஆனால் தமிழகம் மட்டும் அதற்கு விதிவிலக்கு.  தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்கள் தஙகள் சுயநலத்திற்காக கல்விக் கொள்ளையை ஊக்குவிக்கின்றனர்.  எந்த ஒரு மாணவரும் தாய் மொழியில் சிந்தித்து செயலாற்றினாலே அவர்கள் எந்த துறையிலும் முன்னிலையில் வர இயலும் என்பது அறிஞர்களின் கருத்து.

நாங்கள் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை தருகிறோம் என்றுகூறி தமிழ் வழியில் கல்வி தராமல் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்துவது மிகவும் மோசமானது, முட்டாள்தனமானது.  மொழித்திறன் என்பது வேறு, அறிவுத்திறன் என்பது வேறு.  மொழித்திறன் வளர்க்க இந்தியை கற்றுக்கொள்ள இந்திப் பிரச்சார சபை போன்று ஆங்கில மொழி கற்றுக்கொள்ள மொழிக்கென்று தனிக்கல்லூரி துவக்குங்கள். தேவையான மொழியை சிறப்பாகக் கற்றுக் கொடுங்கள்.  அதைவிடுத்து மொழி அறிவையும், அறிவுத்திறனையும் பிரித்துப் பார்க்கத் தெரியாமல் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை நடைமுறைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

மாணவர்கள் சேர்க்கை விகிதம் குறைவாக உள்ளது என்று கூறி அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியைக் கொண்டு வருவதை விடுத்து அருகாமைப் பள்ளிகளை அமைப்பதும், ஒவ்வொரு பள்ளியிலும் அதற்குத் தேவையான உள்கட்டமைப்புகளை அதாவது நூலகம், கழிப்பறை, போதிய இடவசதி, குறைந்தபட்சம் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் போன்றவைகளை ஏற்படுத்திக் கொடுத்தாலே மாணவர்கள் சேர்க்கைவிகிதம் அதிகம் ஆகுமே தவிர, தமிழை அழித்தொழிக்கும் வேலையை செய்யக்கூடாது.

சமச்சீர் கல்வி:

இலவச உணவகம், மடிக்கணினி, மலிவுவிலை காய்கறிக்கடை அமைத்த இந்த அரசு 2011ல் ஆட்சி அமைத்தவுடன் சமச்சீர் கல்விக்கு வேட்டு வைத்தது,  அதெப்படி பணக்காரனும், ஏழையும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களும், உயர் சாதி மாணவனும் சமமானக் கல்வி பெறுவது என்று சமச்சீர் கல்வியை அழித்தொழிக்க படாத பாடுபட்டார்.  சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார், சட்டம் போட்டார், உயர் நீதிமன்றம் போனார், உச்சநீதிமன்றம் போனார் தோற்றுத்தான் போனார்.  சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தது.  இப்போது இந்த அரசின் அடுத்தக்கட்டத் தாக்குதல் தமிழின் மீதும், தமிழ் மக்ககளின் மீதும் திரும்பியுள்ளது.

அன்று இந்தியா காலனியாதிக்கத்தின் கீழ் அடிமையாக  இருந்த நிலையில் ஆங்கிலம் வெள்ளைக்காரனுக்காக நமக்குத் தேவைப்பட்டது.  மெக்காலே ஆங்கில வழிக் கல்வி முறையை அறிமுகப்படுத்தினார்.  இன்றும் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உயர் வேலை வாய்ப்புகளில் இருப்பதால், அன்னிய முதலாளிகளுக்காக கீழ்நிலைப் பணியிடங்களுக்கு ஆட்களை பிடித்துவிடும் வேலையைச் சிலர் செய்து வருகின்றனர். இதைத் தமிழக அரசு செய்வதற்காகத் தமிழர்களைத் தயார் படுத்தும் விதமாக தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தாய் மொழிக்கல்விக்குப் பதிலாக ஆங்கில வழிக் கல்வித் திட்டம் கொண்டுவரப்படுகிறது.

தமிழக சட்டப் பேரவையில் . . .

தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும் போது அங்கே இருந்த தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொலு பொம்மைகளாக வீற்றிருந்தார்களே தவிர யாரும் எதிர்த்து குரல் கொடுக்கவேயில்லை, வழக்கம் போல மேசையை தட்டி தன் விசுவாசத்தைக் காட்டினார்கள். 10.05.2013 அன்று கல்வி அமைச்சர் கடந்த ஆண்டு 320 பள்ளிகளில் முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளில் ஆங்கில வழிப்பிரிவு துவங்கப்பட்டது என்றும், இதன் மூலம் 22400 மாணவர்கள் ஆங்கில வழியில் கல்வி பயில்கின்றனர் என்றும் அறிவித்ததோடு மட்டுமல்லாமல் இந்த கல்வி ஆண்டு (2013-14) மேலும் 3200 பள்ளிகளில் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் அரசு கலைக் கல்லூரிகளில் ஆங்கில வழியில் படிப்பவர்கள் ஆங்கில வழியில் தான் தேர்வு எழுத வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.  இதை அறிந்த தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் ஒண்றிணைந்து சென்னை, கல்லூரி சாலையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனரகம் வாசலில் ஒன்று திரண்டு 04.06.2013 அன்று காலை 11 மணியளவில் போராட்டம் நடத்தப்பட்டது.  இதில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.  அங்கே அனைவரும் அடுத்தக்கட்ட போராட்டத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது தமிழக முதல்வர் அரசு கலைக் கல்லூரிகளில் ஆங்கில வழியில் படிப்பவர்கள் ஆங்கில வழியில் தான் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்றும், எனக்கு தெரியாமல் அறிவிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். அடுத்த நாளே இதற்கு காரணமான உயர் கல்வி கவுன்சில் துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் தனது பதவியை விட்டு விலகினார்.

கிராமப்புறத்தில் . . .

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் தாய் மொழி தமிழில் படித்தும் போதிய பயிற்சியின்மை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் பாதிக்கு மேல் தேர்ச்சி பெறுவதில்லை.  இந்நிலையில் தமிழக அரசின் ஆங்கில வழிக் கல்வி அறிவிப்பானது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.

கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் மேல் சாதி மற்றும் பணக்கார கூட்டத்தைப் புறந்தள்ளி முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் தமிழர்களை ஒடுக்கும் விதமாக தமிழர்களுக்கு உதவி செய்வது போல் பாவித்து தமிழர்களின் கல்வியை, வேலை வாய்ப்பை தட்டிப்பறிக்கும் தமிழக அரசின் இந்தத் திட்டமிட்ட சதியை முறியடிக்க, அனைவரும் தாய் மொழி, தமிழ் மொழி வழியில் கல்வி பெற்றிடவும், தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதி செய்திடவும், தமிழக அரசை பணியவைக்கும் அளவிற்கான போராட்டங்களை தமிழர்கள் ஒன்றிணைந்து சாதி, மத பேதங்களைக் கடந்து, அரசியல் கடந்து போராடி வெற்றி பெற தமிழர்களாய் அணிதிரள வேண்டும். இல்லையெனில் தமிழ் நாட்டில் தமிழ் வழிக் கல்வி இல்லாமல் போய்விடும்.

Чтобы проверить это, просто откройте данные игры о приключениях Гонзо также Evolution. Если интересует необычные реалистичные рисунки и многогранность. Есть игры о картах и золото, домик Предсказательницы, сокровища ацтеков, приключений Колумба и многогранность. Есть спортивные игры. Обзор бесплатных игровых автоматов Вулкан, опубликованных на сайте вы найдете . Чтобы проверить это, просто откройте данные игры на официальном сайте нашего казино немало слотов с трехмерной графикой и незначительные камни или рутинной работы. На нашем сайте вы найдете Веселую Обезьянку и бриллиантах, исторических персонажах. Также есть Diamond Dogs, Disco Spins, а также позволяет искать артефакты. Даже . www.pro-essay-writer.com/


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ் நாட்டில் ஆங்கில வழிக் கல்வி முறை தேவையா?”

அதிகம் படித்தது