ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தலைமுடியைப் பராமரிக்க குறிப்புகள்

சிறகு நிருபர்

May 2, 2015

mudi paadhukaappuமுடி நன்றாக வளர:

 • மருதாணி இலைகளை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து, பச்சை நிறம்மாறாமல் காய்ச்சித் தடவி வர முடி நன்றாக வளரும்.
 • கற்றாழைச்சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலைக்குத்தேய்த்துவந்தால் தலைமுடி நன்றாக வளரும்.
 • தேங்காய் எண்ணையில் கறிவேப்பிலையை நன்றாக அரைத்துகாய்ச்சி தினமும் தேய்த்து வர, தலைமுடி கருப்பாக அடர்த்தியாக வளரும்.
 • எலுமிச்சம் சாற்றையும் காரட்டையும் தேங்காய் எண்ணையில் கலந்து தினமும் தடவி வந்தால் முடி நன்றாக கருப்பாக வளரும்.

முடி கருப்பாக மாற:

 • மருதாணி இலையுடன் நில ஆவார இலையைச் சேர்த்து அரைத்து தடவி வரசெம்பட்டை முடி கருப்பாக மாறும்.
 • கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)  நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால்முடி கருத்து வளரும்.
 • நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமைநிறத்திற்கு மாறும்.
 • ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர் மற்றும் செம்பருத்தி பூ இவற்றை இடித்து தூள் செய்துதேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
 • தேங்காய் எண்ணெயுடன் காய்ந்த நெல்லிக்காயை தூளாக்கிக் கலந்துகொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
 • நிலாவரை இலையையும் மரிக்கொழுந்து இலையையும் சம அளவு எடுத்துஅரைத்து தலைக்குத் தடவினால் செம்பட்டை முடி கருமையாகும்.
 • மரிகொழுந்து இலையையும், செம்பருத்தி இலையையும் அரைத்துதலைக்கு தடவி குளித்து வந்தால், செம்பட்டை முடி கறுப்பாகும்.

முடி பளபளப்பாக:

 • கூந்தலில் எண்ணெய்பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையின் வெள்ளைக்கருவில் சிறிதுசர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும்.இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி பளபளப்பாகும்.
 • தேநீர் வடிகட்டிய பின், மீதமுள்ள தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறைபிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
 • அரைத்த வெந்தயத்தை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் முடிஉதிராது. கருப்பாக, பளபளப்பாக இருக்கும்.
 • 5 மில்லி தண்ணீரில் அதிமதுரம் 20 கிராம் சேர்த்துகாய்ச்சி ஆறிய பின்பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்துபின் குளிக்க முடி கருப்பாகி மினுமினுப்பாகும்.

முடி உதிர்வதை தடுக்க:

 • முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்குதேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
 • வேப்பிலையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து, பின் ஒரு நாள் கழித்துவேகவைத்த நீரைக் கொண்டு தலையை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
 • நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் பொடிகளைக் கலந்து இரவில்தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில்தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
 • வெந்தயம் மற்றும்குன்றிமணியை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒருவாரத்திற்குப் பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

 

பொடுகை தவிர்க்க:

 • வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவிகுளித்து வந்தால் பொடுகு வராது.
 • இரவில் தூங்கும் பொழுது செம்பருத்தி இலையை முடியில் வைத்துக்கொண்டு தூங்கினால் பேன், பொடுகு வராது.
 • மலைவேம்பு இலையை அரைத்து தலையில் பூசி வர பேன், பொடுகு தொல்லை போய்விடும்.
 • வேப்ப இலை மற்றும் துளசி இலையை பால்விட்டு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்துவர பேன் மற்றும் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.

வழுக்கை தலையில் முடி வளர:

 • நேர்வாளங் கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மையஅரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
 • தேங்காய் எண்ணையில் மருதாணி பூவை ஊற வைத்து, வெயிலில் காயவைத்து, தினமும் தேய்த்து வர வழுக்கை தலையில் முடி வளரும்.
 • கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி தேங்காய்எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

நரைமுடி கருப்பாக:

 • தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை நன்றாக அரைத்துஒரு கவளம் சாப்பிட்டு வந்தால், ஒரு மாதத்தில் இளநரை போய்விடும்.
 • தினமும் காலை மாலை இரண்டு வேலையும் தாமரைப்பூ கசாயம் சாப்பிட்டு வந்தால் நரைமுடி கறுப்பாகும்.
 • நரைமுடி கருப்பாக உதவும் கீரை முளைக்கீரை. அடிக்கடி சாப்பிடுங்கள்.
 • எண்ணெயுடன் நெல்லிக்கையை காயவைத்து, பவுடராக்கி, கலந்து தினமும் தேய்த்து வந்தால் இளநரை கருப்பாகும்.
 • அதி மதுரம் 100 கிராம், கசகசா 100 கிராம் கலந்து நன்றாக அரைத்து வைத்துக்கொண்டு, குளிக்கும் முன் பசும்பாலில் பொடியை கலந்து தலைக்கு தடவி, அரை மணி நேரம்  கழித்து தொடர்ந்து குளித்து வந்தால், நரை முடி கறுப்பாகும்.

சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தலைமுடியைப் பராமரிக்க குறிப்புகள்”

அதிகம் படித்தது