பிப்ரவரி 27, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

தலையங்கம் – ஆறாம் ஆண்டில் நுழையும் உங்கள் சிறகு

சிறகு ஆசிரியர்

May 17, 2016

thalayangam1சிறகு இணைய இதழ் வெற்றிகரமாக ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2011ம் ஆண்டு மே 17ம் நாள் அன்று தொடங்கப்பட்ட நமது சிறகு இதழ் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. தமிழ் சமூகத்திற்கு அறிவார்ந்த வகையில் விழிப்புணர்வை தருகிற ஊடகமாக செயல்பட வேண்டும் என்ற பெருங்கனவை நனவாக்கிட பல்வேறு சோதனைகளுக்கு இடையே சிறகு செயல்பட்டு வருகிறது. தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட்டுவர முயற்சி செய்து வருகிறது.

தமிழ் சமூகம் பல்வேறு தாக்குதல்களால் மிக மோசமான நிலையை அடைந்திருக்கும் இந்த நேரத்தில் அந்த சமூகத்தை மீட்டு சரியான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டிய கடமை அனைத்து ஊடகங்களுக்கும் இருக்கிறது. ஊடகங்களை விலைக்கு வாங்கும் போக்கு அதிகரித்துவிட்ட சூழலில் அதனை தகர்த்து நேர்மையான ஊடகமாக செயல்பட சிறகு முயன்று வருகிறது.

தமிழகத்தின் அடிப்படைப் பிரச்சனைகளான நீர் மேலாண்மை, வேளாண்மை, தாய்மொழிக்கல்வி, உயர்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பேணல் போன்றவற்றை முன்னெடுத்து செயல்பட வரும் ஆண்டில் சிறகு உத்தேசித்துள்ளது. களப்பணியாளர்களின் நேர்காணல்களையும், அறிவார்ந்த பெருமக்களின் கட்டுரைகளையும் வெளியிட்டு முன்னேற்றப் பாதைக்கு செல்ல வழிவகுப்பதை திட்டமாகக் கொண்டுள்ளது.

சிறகுக்கு படைப்புகள் வழங்கும் படைப்பாளர்களுக்கும், பேராதரவை அளித்துவரும் வாசகர்களுக்கும், சிறகுக்கு பணி செய்யும் பணியாளர்களுக்கும் உளங்கனிந்த நன்றியை உரித்தாக்குகிறது. தமிழ் வளரவும், தமிழர் மேன்மையுறவும் தொடர்ந்து பாடுபடுவோம், வணக்கம்!


சிறகு ஆசிரியர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தலையங்கம் – ஆறாம் ஆண்டில் நுழையும் உங்கள் சிறகு”

அதிகம் படித்தது