மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திமுக-வின் செயல் தலைவராக ஸ்டாலினை நியமித்து பொதுக்குழுவில் தீர்மானம்Jan 4, 2017

திமுக தலைவர் மு.கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் உள்ளார். அதனால் அவரால் கட்சிப் பணிகளை கவனிக்க முடியவில்லை. இதற்கிடையில் கருணாநிதியின் மகனும், திமுக பொருளாளருமான ஸ்டாலினை திமுக-வின் செயல் தலைவராக்க கோரிக்கைகள் எழுந்தது.

siragu-stalin

இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கருணாநிதி பங்கேற்கவில்லை. அதனால் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையின் கீழ் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், திமுக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர் என பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின் திமுக-வின் செயல் தலைவராக ஸ்டாலினை நியமித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை பொதுச்செயலாளர் அன்பழகன் முன்மொழிய, துரைமுருகன் வழிமொழிந்தார்.

இக்கூட்டத்தில், கருணாநிதிக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும், கருணாநிதி வீட்டில் இருக்கும் நிலையில் கனத்த இதயத்தோடு இப்பதவியை ஏற்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் இக்கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திமுக-வின் செயல் தலைவராக ஸ்டாலினை நியமித்து பொதுக்குழுவில் தீர்மானம்”

அதிகம் படித்தது