ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

திராவிட நாடிது! (கவிதை)

இல. பிரகாசம்

Aug 5, 2017

Siragu-diraavida-naadu

 

 

திராவிட தேசிய நாடிது -இங்கு

சிறுபுல் லடிமைபோல் யாவருமே இங்கில்லை

ஆதவன் சுடர்போல் மாதவர் இங்குண்டு

காதலர் மனையரசு செழிப்புறு வதீங்கு

கண்ணினை காக்கும் கருத்தினை கொண்டு

பகுத்தறி வினையூட்டி வளர்ந்திடு நாடு

சிந்தையை மாய்க்கும் பொல்லாக் குறளை

சிதைக்கும் செயல்வழி உள்ளதிரு நாடு

உள்ளத் திலிருக்கும் உயர்ந்த அன்பினால்

உலகினை கரத்தால் அரவணைத்துச் செல்லும்

உயர்ந்த நல்லறம் போற்றிக் காக்கும்

உயாந்தோர் வாழுந் திருமிகு நாடு

யாவர் நலமே எம்நலம் மெனத்தன்

வாழ்வில் போற்றிவா ழுந்திரு நாடு

எவர்க்கும் இவ்வையம் பொதுமை யெனஉலகில்

வாழக்கடவ மக்கள்வா ழுந்திரு நாடு

 

ஆடவர் மங்கையென பேதமுறைக் காது

ஆடவர் மங்கை சமமெனக்கூ றும்நாடு

வாழ்ந்திடும் வாழ்வில் இரவெனும் இழிநிலை

ஒட்டாது நிதமுழைத்து வாழ்பவர் நாடு

செய்தொழில் மீது பற்று வைத்து

செழிப்புற தொழில் சிறந்த நாடு

வாழ்வியல் நூற்படி இல்லறம் சிறக்க

நல்லறம் செய்யும் சிறந்தபொன் நாடு!

 

மாதவர் ஆற்றிடும் இல்லறப் பண்பினால்

மாதவப் புதல்வர் பிறக்கு நாடு

மாதரைப் பெற்று புகழ்பெற தவம்செய்

மங்கையர் வாழுந் திருமிகு நாடு

காதல் எனுஞ்சொல் லிற்கு அன்பென

கடிமணம் புரியும் நலமிகு நாடு

“அறத்தான் வருவதே இன்பமென” உணர்ந்து

அன்பு பாராட்டி வாழுந்திடுந் நாடு!


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திராவிட நாடிது! (கவிதை)”

அதிகம் படித்தது