திருகோணமலை தேர்தல் களமும் தமிழ் தேசிய கூட்டமைப்பை மையப்படுத்திய மாயையும் நிஜமும்.தொடர்ச்சி……(பாகம் 3)
ராஜ் குணநாயகம்Jul 25, 2020
கடந்த 1௦ வருட காலமாக திருகோணமலை உட்பட வடக்கு-கிழக்கு பகுதிகளில் த.தே.கூ இனரின் செற்பாடுகள் குறித்து குறிப்பாக மீள் புனருத்தாரணம், மீள் கட்டுமானம் மற்றும் வேலைவாய்ப்புக்கள், கல்வி, சமூக, பொருளாதார மேம்பாடுகளும் அபிவிருத்திகளும் தொடர்பாக மக்களால் தொடர்ச்சியாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என எனது முதலாவது பதிவில் குறிப்பிட்டிருந்தேன், அது பற்றி இப்பத்தியில் ஆராய முற்படுவோம்.
திருவாளர் சம்பந்தன் அவர்கள் மிக அண்மையில் “சக்தி” தொலைக்காட்சியினால் நடத்தப்பட்டு வருகின்ற “மின்னல்” நிகழ்ச்சியில் பங்கு பற்றி அதில் நிகழ்ச்சித் தொகுப்பாளரினால் மீள் புனருத்தாரணம்,மீள் கட்டுமானம், வேலைவாய்ப்புக்கள், கல்வி, சமூக, பொருளாதார மேம்பாடுகளும் அபிவிருத்திகளும் மற்றும் முன்னாள் போராளிகள், பெண் தலைமைத்துவ கும்பங்களை வறுமை நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கான செயற்திட்டங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கோ அல்லது தற்போது திருகோணமலையில் த.தே.கூ இனரால் நடாத்தப்பட்டுவருகின்ற தேர்தல் பிரச்சாரங்களில் உரை நிகழ்த்துகின்ற போதோ இவை தொடர்பான தெளிவான பதில் எதனையும் காணமுடியவில்லை என்றே சொல்லலாம்.
இப்பின்னணியில், இவ்விடயங்கள் தொடர்பாக மூலோபாய திட்டங்கள் உள்ளதா? அவை SMART(S-specific, M-Measurable, A-Achievable, R-Realistic T-Time bound) இலக்குகளை உள்ளடக்கி காணப்படுகின்றதா (அதாவது எளிமையாக சொல்வதென்றால் இலக்குகள் விஞ்ஞானப் பூர்வமாக (scientifically) அடையப்படக்கூடியதா?) , இக்கருமங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான அரசியல் உபாயம் (political stratagy) என்ன? இவை பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்துவீர்களா? இவை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படுமா? என்பதுவே மக்கள் த.தே.கூ இனரிடம் முன்வைக்கும் கேள்விகளாகும்.
நிற்க, இக்கேள்விகள் இவ்விடயங்கள் தொடர்பாக த.தே.கூ இனரின் மீது விமர்சனங்களை முன்வைத்துவரும் ஏனைய தமிழ் கட்சிகள்/ தமிழ் தலைமைகளுக்கும் பொருந்தும்.
மேலும் வரும்….அதுவரை விடைகளை தேடுவோம்…….
ஈழன்
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருகோணமலை தேர்தல் களமும் தமிழ் தேசிய கூட்டமைப்பை மையப்படுத்திய மாயையும் நிஜமும்.தொடர்ச்சி……(பாகம் 3)”