மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருகோணமலை தேர்தல் களமும் தமிழ் தேசிய கூட்டமைப்பை மையப்படுத்திய மாயையும் நிஜமும்-தொடர்ச்சி-பாகம் 4.

ராஜ் குணநாயகம்

Aug 1, 2020

siragu tamil national alliance2
எனது முதலாவது பதிவில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்:

“கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்”

“திருகோணமலை தமிழர்கள், இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு காலாகாலமாக தொடர்ச்சியாக தமிழர்களுக்கான உரிமைகள், நீதி, கெளரவம் மற்றும் தமிழர்களின் இருப்பு எனும் விழுமியங்களை முன்னிறுத்தி அதன் அடிப்படையில் தந்தை செல்வா காலம் தொட்டு இன்று வரையும் தமிழர் விடுதலை கூட்டணி, இலங்கை தமிழ் அரசு கட்சி என்று (இ.த.அ.க) தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பையுமே (த.தே.கூ) ஆதரித்து வருகின்றமை வெள்ளிடைமலை.”

அதாவது சந்தையில் நிலவுகின்ற முற்றுரிமை/ஏகபோக உரிமை ( Monopoly) உதாரணமாக மைக்ரோசொப்ட்(Microsoft) உம் விண்டோஸ் இயங்குதளமும் (Windows Operating Sytem) இப்பிரத்தியேக உலக சந்தையை தீர்மானிக்கும் சக்தியாகவும் (deciding force) போட்டித்தன்மையற்ற ஏகபோக செல்வாக்குச் செலுத்தும் (influencing) ஒரேயொரு கம்பனியாகவும் பல தசாப்தங்களாக தன்னை உலகளாவிய சந்தையில் நிலை நிறுத்தியிருக்கும் நிலைபோன்றதொரு நிலையினையே இ.த.அ.க/த.தே.கூ இதுகாலவரை திருகோணமலையில் நிலை நிறுத்தியிருக்கின்றது எனலாம்.

இ.த.அ.க/த.தே.கூ ஆனது இந்நிலையினை இதுகாலவரை தக்கவைத்துக் கொள்வதற்கான காரணங்களாக கீழ் வருவனவற்றை குறிப்பிட முற்படலாம்:

1.இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அரசியல் தீர்வையும் வலியுறுத்தி வருகின்றமை

2.ஓர் பாரம்பரியமான கட்சியாக தன்னை நிலை நிறுத்தியிருக்கின்றமை

3. மாறிமாறி வருகின்ற அரசாங்கங்களோடு இணைந்துகொண்டு சலுகைகளுக்காக தமிழர்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசியலை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக அதாவது எதிர்க்கட்சியாக தன்னை காட்டிக்கொள்வதில் வெற்றிபெற்றிருக்கின்றமை

4.”தமிழ் தேசியம்” எனும் கருப்பொருளை மிக இலாவகமாக கையாண்டு உணர்ச்சி அரசியல் எனும் சந்தைப்படுத்தல் உத்தியின் ஊடாக மக்களை ஒரு மாயைக்குள் வைத்திருப்பதில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருகின்றமை

5.போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரான கடந்த 10 வருடங்களாக
த.தே.கூஆனது குறிப்பாக தேர்தல் காலங்களில் தன்னை தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பாக அடையாளப்படுத்திக் கொள்ளலும் அதன்பால் மக்கள் கொண்டுள்ள பேராதரவும்

6.“கீரைக்கடைக்கும் எதிர்க்கடை இல்லாமை”

அ. குறிப்பாக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரான கடந்த 10 வருடங்களாக திருகோணமலையில் செயற்பட்டு வருகின்ற உதிரி தமிழ் கட்சிகள் இ.த.அ.க/த.தே.கூ இனரின் அரசியல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக மேற்கொண்டுவரும் குற்றச்சாட்டுக்களுக்கு அப்பால் மக்கள் மத்தியில் தம்மை இ.த.அ.க/த.தே.கூ இனருக்கு மாற்றீடான, வலுவான கட்சிகளாக வலுப்படுத்திக் கொள்ளவும், இ.த.அ.க/த.தே.கூ இனரால் கண்டுகொள்ளப்படாத மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கும் அக்கட்சிகளால் தீர்வுகளையும் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கிறதா? அக்கட்சிகள் முன்மொழியும் அரசியல் தீர்வு தொடர்பான யோசனைகள் சமகால இலங்கை மற்றும் புவிசார் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப யதார்த்த பூர்வமானதா? அவர்கள் வரைந்து வைத்திருக்கின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகள், கொள்கைகள் தான் என்ன?

ஆ. திரு.சம்பந்தனை/த.தே.கூ இனரை வெற்றிகொள்ளத்தக்க மாற்றீடான வேட்பாளர்கள் உதிரி தமிழ் கட்சிகளிடத்தில் உள்ளனரா? இல்லை, அவ்வாறான பொருத்தமான வேட்பாளர்களையும் மக்கள் இன்னும் தெரிவுசெய்ய தயாராக வில்லையா? அல்லது, அவ்வாறான பொருத்தமான வேட்பாளர்கள் தமிழர் நலன்சார் அரசியலை மையமாக கொண்டிராத கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றமையும் (உ+ம். ஜே.வி.பி) ஒரு காரணமா?

குறிப்பு: திரு.சம்பந்தனை இனரை வெற்றிகொள்ளத்தக்க மாற்றீடான வேட்பாளர்கள் (காலஞ்சென்ற திரு.தங்கத்துரை அவர்களை தவிர) அல்லது அவரை விட அதிக மக்கள் செல்வாக்கு கொண்ட வேட்பாளர்கள் இ.த.அ.க/த.தே.கூ இற்குள் உள்ளனரா? அவ்வாறு அதிக மக்கள் செல்வாக்கு கொண்ட வேட்பாளர்கள் உள்வாங்கப்படுவதில்லையா? அவ்வாறு உள்வாங்கப்படுபவர்களுக்கும் கட்சியால் உரிய ஆதரவும் வழங்கப்படுகிறதா? என பல கேள்விகளும் மக்களிடத்தில் உண்டு.

இம்முறை திருகோணமலை தமிழர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பை மையப்படுத்திய மாயையிலிருந்து வெளிவருவார்களா? அவ்வாறு வெளியே வருவதற்கான புறச்சூழல் காணப்படுகின்றதா? ஒருவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டு மக்கள் மாற்றுத்தெரிவுகளை மேற்கொள்வார்களானால், அதன் விளைவாக எதிர்வரும் காலங்களில் ஏற்படும் சாதக,பாதக அம்சங்கள் என்ன?
மக்களின் தீர்ப்புக்காக காத்திருப்போம்… அதுவரை விடைகளை தேடுவோம்.

அந்த இயக்கமும், அதன் போராளிகளும் தம்மக்களுக்காக எதையும் செய்யத் துணிந்தவர்களாகவும், தம்முயுரிலும் மேலாக மக்களை நேசித்தவர்களாகவும், தெளிவான கொள்கையோடும், அக்கொள்கையின் மீது முழு நம்பிக்கையுடயவர்களாவும் மக்களோடு மக்களாக, மக்களுக்காகவே பெரும் தியாகங்களை செய்தார்கள், அதன்பால் மக்களும் அவர்கள் மீது பெரும் நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள்- அவர்களால் பெரும் புரட்சியொன்றை வழிநடாத்தி, வெற்றிபெறவும் முடிந்தது, அச்சூழலுக்கும் தற்போதய சூழ்நிலைக்கும் மிகப்பாரிய இடைவெளி உண்டு.

நீங்கள் கேள்விக்குட்படுத்திய விடயம் தொடர்பாக திரு.சம்பந்தன் அவர்கள் ஒன்றை கூறுவார், திரு.சுமந்திரன் அவர்கள் இன்னுமொன்றை சொல்வார், திரு.மாவை அவர்களோ வேறொன்றை பிரஸ்தாபிப்பார், எது உண்மை, எது பொய் என்பது அவர்களுக்கே வெளிச்சம்! -இதுவே அவர்களது அரசியல் சாணக்கியம், அதாவது தமிழர்களை காலாகாலமாக ஏமாற்றும் சாணக்கியம்.

அது சரி, உங்கள் கட்சி தலைவர் ஏன் தொடர்ச்சியாக, பலகாலமாக மக்களால் நிராகரிக்கப்படுகிறார் என்பதற்கான விடைகளை கண்டுபிடிதத்துவிட்டீர்களா?

 

ஈழன்.

 


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருகோணமலை தேர்தல் களமும் தமிழ் தேசிய கூட்டமைப்பை மையப்படுத்திய மாயையும் நிஜமும்-தொடர்ச்சி-பாகம் 4.”

அதிகம் படித்தது