டிசம்பர் 7, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

திருப்பதியை கலக்கும் தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி!

சா.சின்னதுரை

Aug 20, 2016

திருப்பதியில் முகநூல் பக்கம் மூலம் பெண்கள் அளிக்கும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறார் ஒரு தமிழகப் பெண் ஐபிஎஸ் அதிகாரி!

 Siragu-IPS-lady1

திருப்பதி நகரக் காவல் கண்காணிப்பாளராக ஜெயலட்சுமி சமீபத்தில் பொறுப்பேற்றார். தமிழகத்தைச் சேர்ந்த இவர், ஆந்திரா கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். திருப்பதி நகர முதல் பெண் எஸ்.பி. என்ற பெருமையையும் ஜெயலட்சுமி பெற்றுள்ளார். ஒருபெண் நிர்வகிக்கிற பகுதியில் முதலில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் ஜெயலட்சுமி. முகநூலில் Tirupati SHE TEAM என்றொரு பக்கத்தை பெண்களுக்காக பிரத்யேகமாகத் தொடங்கி, புகார்கள் பெற்று அதனடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அசத்தி வருகிறார்.

Tirupati SHE TEAM பக்கத்திற்குச் சென்று Contact Us என்ற பொத்தானை சுட்டினால் ஒரு ஆன்லைன் படிவம் வரும். அதில் புகார்களை குறிப்பிட்டால் போதும். ‘முகநூல்’ வழியாக அனுப்பப்படும் புகார்களை கவனிப்பதற்காகவே ஒரு பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ‘ஷீ டீம்’ என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் புகார்களை உடனுக்குடன் ஆராய்ந்து, விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள். நடவடிக்கை குறித்த விபரங்களை சம்பந்தபட்டவருக்கு பதில் அனுப்புவதுடன், குறிப்பிட்ட சில நடவடிக்கை விபரங்களை முகநூலில் மேம்படுத்தி வருகிறார்கள். முக்கியமான சில புகார்களை ‘ஷீ டீம்’ காவலர்கள் எஸ்.பி ஜெயலட்சுமியின் கவனத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். அதனை ஆராய்ந்து அவரே நேரடி நடவடிக்கையில் இறங்குகின்றார்.

Siragu-IPS-lady2

மாதம் சராசரியாக 100 புகார்கள் வரை வருகின்றன. இதுவரை புகார் அடிப்படையில், 15க்கும் மேற்பட்டோர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் மீது எச்சரிக்கை மற்றும் ஆலோசனை வழங்கி புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப் மூலமும் புகார்களைப் பெறுகிறார்கள். தவிர, Tirupati Police என்றொரு முகநூல் பக்கம் மூலம் அனைத்து தரப்பினரும் புகார் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

 புகார்கள் பெறுவது மட்டுமின்றி, பெண்களின் பிரச்சினைகள், மன அழுத்தத்தைப் போக்க மனநல ஆலோசனை மையமும் செயல்படுகிறது. இதற்காக ‘ஷீ டீம்’ காவலர்கள் முகாம் நடத்தி பெண்களின் மனக்குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கின்றனர்.


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருப்பதியை கலக்கும் தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி!”

அதிகம் படித்தது