மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் பாமக விலகல்



Nov 5, 2016

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் போன்ற மூன்று தொகுதிகளில் நவம்பர் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இம்மூன்று தொகுதிகளிலும் பாமக போட்டியிடுவதாக அறிவித்து அந்த மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் சில நாட்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

siragu-election

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக, திமுக, பா.ஜ.க, பாமக, சுயேட்சைகள் உட்பட 44 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தாக்கல் செய்யப்பட வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இன்று சின்னம் ஒதுக்கப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் பாமக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் டி.செல்வம், தேர்தல் நடத்தும் அதிகாரி தமக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கவில்லை எனவும் அவ்வாறு அச்சின்னம் கிடைக்கவில்லை என்றால் வாபஸ் பெறப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் பாமக விலகல்”

அதிகம் படித்தது