தீவிரவாதிகள் அசாமில் தாக்குதல்: 3 ராணுவ வீர்ர்கள் பலி
Nov 19, 2016
அசாம்- தின்சுகியா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கிடையில் தொடர்ந்து சண்டை நடந்து வரும் நிலையில், தீவிரவாதிகள் ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். அதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். இது வரை மூன்று ராணுவ வீர்கள் இத்தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.
மேலும் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உல்பா பயங்கரவாதிகள் இத்தாக்குதலை ஏற்படுத்தியிருக்கலாம் என்று, சந்தேகிக்கப்படும் சிலரை ராணுவ வீரர்கள் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த உல்பா அமைப்பு என்பது அசாமில் தனிநாடு கேட்டு போராட்டம் நடத்தியது. மத்திய அரசால் இவ்வமைப்பு 1990களில் தடைசெய்யப்பட்டது. இருப்பினும் அவ்வப்போது ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனவே இத்தாக்குதலை நடத்தியது இவ்வமைப்பாக இருக்கும் என்று பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தீவிரவாதிகள் அசாமில் தாக்குதல்: 3 ராணுவ வீர்ர்கள் பலி”