ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருந்து மணிப்பூர் முதல்வர் உயிர் தப்பினார்Oct 24, 2016

இன்று மணிப்பூர் முதல்வர் இபோபி மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தின் மாவட்ட தலைமையகத்தை திறந்து வைப்பதற்காக வந்திருந்தார். அப்போது திடீரென தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் முதல்வர் இபோபி உயிர் தப்பினார். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

TO MATCH FEATURE INDIA-IMPHAL.

காங்கிரசு கட்சியின் இபோபி தலைமயிலான ஆட்சி மணிப்பூரில் நடந்து வருகிறது. மணிப்பூரின் நாகா இன மக்கள் பகுதிகளை நாகாலாந்துடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இன்று மாவட்ட தலைமையகத்தை திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் உள்ளனர்.

நாகலாந்து தனிநாடு கோரும் தீவிரவாதிகளே இந்த துப்பாக்கிச்சூட்டிற்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருந்து மணிப்பூர் முதல்வர் உயிர் தப்பினார்”

அதிகம் படித்தது