டிசம்பர் 3, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

துருக்கியில் நடந்த குண்டுவெடிப்பில் 13 ராணுவ வீரர்கள் பலிDec 17, 2016

துருக்கி-கைசேரி நகரில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 13 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர், 48பேர் காயமடைந்துள்ளனர். அங்குள்ள பல்கலைக்கழகம் வாயில் அருகாமையில் இந்த குண்டுவெடிப்பு நடந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

siragu-thurukki

இந்த குண்டுவெடிப்பில் அங்கு இருந்த பேருந்து ஒன்று உருக்குலைந்தது போன்ற காட்சிகளை அங்குள்ள தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியது. இந்த குண்டுவெடிப்பு நடந்த நகரம் தொழிற்சாலைகள் மிகுந்த இடமாகும்.

இதற்கு முன்பு சென்ற வாரம் துருக்கியில் குர்தீஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் பலியாகியுள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “துருக்கியில் நடந்த குண்டுவெடிப்பில் 13 ராணுவ வீரர்கள் பலி”

அதிகம் படித்தது